வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அட்லியுடன் சேர இருந்த சிவகார்த்திகேயன்.. வாய்ப்பை தட்டி சென்றத பிரபலம்

அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி2,  தெறி, பிகில், மெர்சல் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அட்லியும் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்கள் என பல மேடைகளில் கூறியுள்ளன. அட்லியின் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி2 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் முதலில் நடிக்க இருந்துள்ளார்.

ஆனால் அப்போது சிவகார்த்திகேயன் சினிமாவில் என்ட்ரி ஆனதால் அவருக்கு மற்றொரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் இப்படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது ஆர்யா, நயன்தாரா இருவரும் இணைந்து நடித்தனர். ஜெய் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார்.

ஆனால் சில காரணம் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது அட்லி பல படங்களில் ஒப்பந்தமாகி இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனும் பல படங்கள் பிஸியாக நடித்து வருகிறார். அதனால் கூடிய விரைவில் அட்லியின் படத்தில் சிவகார்த்திகேயன் இவர் என பலரும் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. இதன் பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்த படமான பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ள SK 20 படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக உக்ரைன் நாட்டு மாடல் அழகி மரியா நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீசாகி வைரலானது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு படத்தில் இணைய இருக்கிறார்.

இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு அட்லியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. தற்போது அட்லி பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

எனவே ஜவான் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு அட்லி சிவகார்த்திகேயனை சந்தித்து தன்னுடைய அடுத்த படத்தை பற்றி விவாதிக்க திட்டமிட்டுள்ளார். அட்லி-சிவகார்த்திகேயன் முதல் முதலாக இணையும் கூட்டணியில் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடித்தமான படம் உருவாகும் என்பதால் இவர்களது காம்போ இணைய வேண்டும் என கோலிவுட் ரசிகர்கள் பெரிதும் ஆசைப்படுகின்றனர்.

Trending News