செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

மைக் போட்டு மானத்தை வாங்கிய இமான்.. இணைய கூலிப்படைக்கு சிவகார்த்திகேயன் போட்ட கட்டளை

Imman-Sivakarthikeyan: இப்போது சோஷியல் மீடியாவை திறந்தாலே சிவகார்த்திகேயன், இமான் விவகாரம் தான் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் இமானுக்கு ஆதரவாக பேசி வந்தாலும் சிவகார்த்திகேயன் பக்கம் நிற்கும் ரசிகர்களும் இருக்கின்றனர். அதனாலேயே இந்த சர்ச்சையில் எது தான் உண்மை என்று தெரியாமல் பலரும் குழம்பி போகின்றனர்.

ஆனால் சிவகார்த்திகேயன் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பல மாதங்களுக்கு முன்பே மீடியாவில் அரசல் புரசலாகவும், வதந்திகளாகவும் வெளிவந்தது. அதனாலயே சினிமா பிரபலங்கள் பலருக்கும் இது ஒரு அதிர்ச்சியான விஷயமாக தெரியவில்லை. ஆனால் சிவகார்த்திகேயனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வந்த ரசிகர்கள் பலருக்கும் இது நம்ப முடியாத பேரதிர்ச்சியாக இருக்கிறது.

அந்த வகையில் வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி இது குறித்த ஒரு விஷயத்தை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார். அதுவும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக கொழுந்து விட்டு எரிகிறது. ஏற்கனவே இது குறித்து ஜாடை மாடையாக பேசி இருந்த இவர் இப்போது இமான் வாயை திறந்ததும் பல விஷயங்களை ஓப்பன் ஆக சொல்லி இருக்கிறார்.

அதில் முக்கியமானது தன்னுடைய பெயர் டேமேஜ் ஆகிவிடக் கூடாது என்பதற்காக சிவகார்த்திகேயன் இணைய கூலிப்படைக்கு முக்கியமான கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறியது தான். அதன்படி இதற்கு முன்பாக அவர் பற்றி பாசிட்டிவாக வெளிவந்த வீடியோக்கள் அனைத்தும் இப்போது கட் செய்யப்பட்டு மீடியாவில் பரப்பப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் எங்கள் சிவா அண்ணா சொக்கத்தங்கம், இமான் வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டை வைத்துள்ளார் என அவருக்கு ஆதரவான கருத்துக்களும் வெளியாகி கொண்டிருக்கிறது. உண்மையில் இதையெல்லாம் பிளான் போட்டு செய்வது சிவகார்த்திகேயன் தான் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மன்னிக்க முடியாத ஒரு இழிவான செயலை செய்த அவரை ரசிகர்கள் எதற்காக ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

ஆக மொத்தம் மைக் போட்டு மானத்தை வாங்கிய இமானால் சிவகார்த்திகேயன் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த சர்ச்சையை சந்தித்து வருகிறார். ஆனால் தன் தரப்பு விளக்கத்தை கொடுக்காமல் அவர் அமைதி காத்து வருவதும் பல விஷயங்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் வாயை திறந்தால் மட்டுமே இந்த விவகாரம் முற்றுப்பெறும்.

Trending News