வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எங்கு சென்றாலும் துரத்தும் சிவகார்த்திகேயன்.. தனுஷை ஒரு கை பார்க்க பெரிய ஹீரோவின் வாழ்த்து

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் பல எதிர்ப்புகள் வந்தது. அப்போது நடிகர் தனுஷ் தான் இதற்கு பக்கபலமாக இருந்து தன்னுடைய தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் படங்களை தயாரித்து வந்தார்.

அதன் பின்பு சிவகார்த்திகேயனும் முக்கிய நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றார். ஆனால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆகையால் தனுஷுக்கு போட்டி இனி சிவகார்த்திகேயன் தான் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

Also Read : சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பல கோடி நஷ்டம்.. 6 வருட போராட்டம் தனுஷ், கார்த்தியை சமாளிப்பாரா.?

அதற்கு ஏற்றார் போல் இவர்கள் இருவரும் எலியும் பூனையும் ஆகத்தான் இருந்து வருகிறார்கள். தனுஷை எங்கு சென்றாலும் துரத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதாவது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த வருகிறார் தனுஷ்.

அவருக்கு போட்டியாக சிவகார்த்திகேயனும் இறங்கி உள்ளார். அதாவது அறிவியல் புனைகதையாக சிவகார்த்திகேயனின் அயலான் படம் உருவாகி வருகிறது. இந்த படம் எப்போது வெளியாகும் என காத்திருந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.

Also Read : ராட்சசன் ஆக வந்த 5 பெஸ்ட் சைக்கோ கேரக்டர்கள்.. ஹீரோவை மறந்து கொடூரமாக நடித்த தனுஷ்

சமீபத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகர் அமீர்கான் சிவகார்த்திகேயனை சந்தித்து அயலான் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதாவது அயலான் பான் இந்திய படமாக ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஆகையால் ஹிந்தியில் அமீர்கான் அயலான் படத்தை வெளியிடுகிறார்.

மேலும் இப்போது சிஜி பணிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயனுக்காக அமீர்கான் இந்த படத்தை ரிலீஸ் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தனுஷ் பாலிவுட்டில் அசத்திய நிலையில் அவரை ஓரம் கட்ட சிவகார்த்திகேயன் முதல் படியே எடுத்து வைத்துள்ளார்.

aamir-khan-sivakarthikeyan

Also Read : சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பல கோடி நஷ்டம்.. 6 வருட போராட்டம் தனுஷ், கார்த்தியை சமாளிப்பாரா.?

Trending News