வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சென்டிமென்டாய் பேசி ஓவர் வெறுப்பை சம்பாதித்த சிவகார்த்திகேயன்.. விஜய் போல் அட்ட காப்பி அடிக்கும் SK

Sivakarthikeyan: வாயுள்ள பிள்ளை எங்க போனாலும் பிழைத்துக் கொள்ளும் என்ற ஒரு பழமொழி உண்டு. இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ, சிவகார்த்திகேயனுக்கு நல்லாவே பொருந்தும்.

தன்னுடைய திறமையாலும், வாய்ப்பேச்சாலும் ஒவ்வொரு படங்களையும் வெற்றியாக கொடுத்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்.

அந்த வகையில் இதனை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்று முழு முயற்சியாக செயல்பட்டு வருகிறார். இன்னொரு பக்கம் அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என்று சில பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

விஜய் போல் அட்ட காப்பி அடிக்கும் SK

அதனால் அவரைப் போலவே அட்டகாப்பி அடிக்கும் விதமாகவே கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறார். ரசிகர்களை அடிக்கடி சந்தித்து செண்டிமெண்டாக பேசிவிட்டால் எல்லாம் நமக்கு சாதகமாகிவிடும் என்ற நினைப்பில் பேசி வருகிறாராம்.

அதாவது ரசிகர்களை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்குன்னு யாரும் இல்ல. நீங்க தான் எனக்கு எல்லாமே என்று அவர்களை ஐஸ் வைத்து பேசுகிறார். ஆனால் இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறுப்பாகி வருகிறது.

எதற்கு சம்பந்தமே இல்லாமல் ரசிகர்களை சந்தித்து ஒரு மீட்டிங் போட்டார் என்று யாருக்குமே இப்பொழுது வரை தெரியவில்லை. இதையெல்லாம் காட்டி எனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லி ஓவர் அலப்பறையை கூட்டுவது போல் இருக்கிறது.

ஏற்கனவே விஜய், நடிப்பை விட அதிகளவு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தும் படத்தில் ஏனோ தானோ என்று நடித்து வருகிறார். அதனால் இவர்களுக்கு இடையில் புகுந்து அந்த இடங்களை பூர்த்தி செய்து விட வேண்டும் என்று மனக்கணக்கில் இந்த மாதிரி நடந்து கொள்வதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதற்கேற்ற மாதிரி ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசத்தை கொண்டு வருகிறார். தற்போது அமரன் படத்திலும் இதுவரை நடிக்காத கேரக்டரிலும், எந்த மாதிரி கதையில் நடித்தால் மக்களை ஈசியாக கவர்ந்து விடலாம் என்பதற்கு இது மாதிரி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.

அதாவது இடைப்பட்ட நேரத்தில் பெண்கள் விஷயத்தில் இவருடைய பெயர் டேமேஜ் ஆனதால், ரசிகர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் அடிக்கடி அவர்களை சந்தித்து பேசி வருவதாக தெரிகிறது. எது எப்படியோ மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணுவதில் யார் பெஸ்ட்டாக இருக்கிறாரோ, அவர்களுக்கு கண்டிப்பாக மக்களிடத்தில் வரவேற்பு கிடைக்கும்.

Trending News