வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தோல்வி பயத்தால் இந்த இயக்குனர் வேண்டாம் என ஒதுங்கி சிவகார்த்திகேயன்.. வசமாக மாட்டிய சசிகுமார்

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி அதன்பின் தனுஷின் 3 திரைப்படத்தில் அவரது நண்பராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் தனுஷின் தயாரிப்பில் எதிர்நீச்சல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகார்த்திகேயன் அத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது எனலாம்.

அதைத் தொடர்ந்து மான் கராத்தே உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகராக உருவானார் என சொல்லலாம். இத்திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரஜினிமுருகன் திரைப்படத்திலும் நடித்த நிலையில் அத்திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது.

Also Read : கையும் களவுமாக மாட்டிக் கொண்ட தளபதி விஜய்.. சிவகார்த்திகேயன் பாடலை காப்பி அடித்து சிக்கிய ‘ரஞ்சிதமே’

தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் சமந்தா, சிம்ரன், சூரி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. இத்திரைப்படத்தின் தோல்வியை ஈடுகட்ட சிவகார்த்திகேயன் வேறு சில திரைப்படங்களில் நடித்த நிலையில், இயக்குனர் பொன்ராம் இவரை வைத்து வேறொரு திரைப்படம் இயக்கலாம் என்ற யோசனையில் இருந்தார்.

அந்த சமயத்தில் தான் பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ், சசிகுமார் காம்போவில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் முதன்முதலில் இத்திரைப்படத்தின் கதையை சிவகார்த்திகேயனிடம் தான் பொன்ராம் கூறினாராம். கதையை கேட்ட சிவகார்த்திகேயன் உஷாராக இப்படத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறி விட்டாராம் .

Also Read : செக் வைக்கும் தயாரிப்பாளர்.. தலைவலி பிடித்த அயலான் படத்தால் நிம்மதியை இழந்து சிவகார்த்திகேயன்

அதன் பின்னரே நடிகர் சசிகுமார் தனது கடனை அடைப்பதற்காக இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களின் தோல்வியால் இயக்குனர் பொன்ராம் தமிழில் படங்களை இயக்குவதை சில வருடங்கள் நிறுத்தி வைத்துள்ளார். இதனிடையே தற்போது சிவகார்த்திகேயன் பல திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனை அணுகியுள்ளார்

ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் தீபாவளிக்கு முன்தினம் ரிலீசான பிரின்ஸ் திரைப்படம் ஊற்றி மூழ்கிய நிலையில் இந்த திரைப்படத்தின் தோல்வியை ஈடுகட்ட மாவீரன் திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் பொன்ராம் கதை சொல்ல முற்படும் போதெல்லாம் சிவகார்த்திகேயன் அவரை உதாசினப்படுத்துகிறாரம். வளர்த்து விட்டவரை இப்படியா கண்டுக்காமல் இருப்பது என கோலிவுட் வட்டாராமே அவரை வஞ்சித்து வருகிறது.

Also Read : மீண்டும் கடனாளியாக மாறும் சிவகார்த்திகேயன்.. தோல்வி பட வரிசையில் 5வது படம்

Trending News