சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியிடாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. அனுதீப் இயக்கத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, மரியா, சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது எதிர்பார்த்து அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
டாக்டர், டான் போன்ற திரைப்படங்களின் மூலம் பாக்ஸ் ஆபிஸை கலக்கிய சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தை ரொம்பவும் எதிர்பார்த்தார். ஆனால் அவருடைய எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் தற்போது இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன் காமெடியை மட்டுமே டார்கெட் செய்து படங்களை தேர்ந்தெடுத்து வருவதாகவும், அதனால் இப்படம் ரசிக்கும் வகையில் இல்லை எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். இப்படி எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி படங்களை கொடுத்தால் அது எத்தனை நாளைக்கு ஒர்க் அவுட் ஆகும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் ஹாட் ட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது வரும் விமர்சனங்கள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் ஒரு அசத்தல் என்ட்ரி கொடுக்க இருந்த சிவாவுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.
Also read:காமெடி கலாட்டாவாக வெளிவந்துள்ள சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
இதனால் இந்த திரைப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்க இருந்த டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் தற்போது அடிமாட்டு விலைக்கு வாங்கி இருக்கிறதாம். எப்போதுமே இந்த நிறுவனம் சிவகார்த்திகேயன் படத்தை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு வரும்.
ஆனால் இந்த முறை படத்தின் முதல் நாள் ஓப்பனிங்கே மந்தமாக இருப்பதால் ஓடிடி பிசினஸும் சரிவை சந்தித்துள்ளது. அடுத்தடுத்து 100 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த பிரின்ஸ் படம் மரண அடியை கொடுத்துள்ளது. இனிமேலாவது அவர் கதையில் வித்தியாசம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also read:நான் நடிக்க மாட்டேன்.. மனைவி, குழந்தைகளுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு