வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்திய சிவகார்த்திகேயன்.. கொந்தளிக்கும் தனுஷ் ரசிகர்கள்

தனுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையே பல வருடங்களாக பிரச்சனை நடந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதாவது தனுஷின் 3 படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை சினிமாவில் தனுஷ் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்பு சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களை தனுஷ் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இப்படி சிவகார்த்திகேயனுக்கு அடித்தளம் போட்டு கொடுத்தவர் தனுஷ் தான். அதன் பின்பு அந்த நூலைப் பிடித்து போல சிவகார்த்திகேயன் கடின உழைப்பால் அடுத்தடுத்து படங்கள் நடித்த முன்னணி ஹீரோக்கள் இடத்தை பிடித்தார். அதுமட்டுமின்றி மிக குறுகிய காலத்திலேயே அபரிவிதமான வளர்ச்சி அடைந்தார்.

Also Read :சிவகார்த்திகேயனை புறக்கணித்த பிரபல சேனல்.. சரியான நேரத்தில் கொடுத்த பதிலடி

பெரிய நடிகர்களே 100 கோடி வசூல் படங்களை கொடுக்க திணறி வருகின்ற நிலையில் டாக்டர், டான் என அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்களை சிவகார்த்திகேயன் தந்துள்ளார். ஆனால் தற்போது தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் எந்த படம் வெளியானாலும் அவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிப்பார். அந்த வகையில் அருண் விஜய், சிவகார்த்திகேயன் இடையே பிரச்சனை இருந்த போதும் அருண் விஜயின் யானை படம் வெளியாகும் போது இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Also Read :சிம்புவை வம்பு இழுக்கும் தனுஷ்.. அப்பதான் ஆட்டம் சூடு பிடிக்கும்

மேலும் சமீபத்தில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கும் சிவகார்த்திகேயன் படகுழுவுக்கு வாழ்த்துக்களை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்தார். ஆனால் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகும் போது சிவகார்த்திகேயன் எந்த பதிவும் வெளியிடவில்லை.

தனுஷ் மீது உள்ள முன் பகை காரணமாகத்தான் சிவகார்த்திகேயன் இவ்வாறு செய்கிறார். அதுவும் திருச்சிற்றம்பலம் படம் வெற்றி பெறக் கூடாது என்று நினைத்தார். ஆனால் அதற்கு மாறாக படம் ஏகபோக வரவேற்பை பெற்றதாக தனுஷ் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

Also Read :உருவ கேலிக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை.. தனுஷ், விஜய் சேதுபதி ஒப்பிட்டு ஆவேசம்

Trending News