வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பேராசையில் பொங்கும் சிவகார்த்திகேயன்.. அந்த ஹீரோவை ஜெயிக்கணும்னு செய்யும் தரமற்ற வேலை

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் இந்த படத்திற்கான பிரமோஷன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் பிசினஸ் பல கோடிக்கு கல்லா கட்டி இருக்கிறது. இதுவே ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படத்தின் பிரமோஷனுக்கு தாராளமாக செலவு செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கண்டிப்பாக கூறிவிட்டாராம்.

அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களால் இப்போது பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் இன்னும் ஒரு படி மேலே போய் முன்னணி ஹீரோக்களை ஓவர் டேக் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வெற்றி நடிகராக மாறி இருக்கும் இவர் ரசிகர்களின் மனதில் இளம் மாஸ் ஹீரோ என்ற ஒரு பிம்பத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.

Also read:சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய தனுஷ்.. ரிலீசுக்கு முன்பே பல கோடி பிசினஸ் செய்த வாத்தி

ஆனால் இதெல்லாம் அவருக்கு போதவில்லையாம். இவர் இப்போது போட்டியாக பார்ப்பது தனுஷ் மற்றும் விஜய்யை தான். அதனாலேயே அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இவர் கவனமாக உற்றுநோக்கி கொண்டிருக்கிறாராம். ஏனென்றால் இவர்கள் மூவருமே தற்போது நேரடி தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் சிவகார்த்திகேயன் வாரிசு மற்றும் வாத்தி திரைப்படங்களுக்கு செய்யும் பிரமோஷனை விட பல மடங்கு அதிகமாக பிரின்ஸ் பட ப்ரொமோஷன் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளருக்கு ஆர்டர் போட்டு இருக்கிறார்.

இந்த விஷயம் தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் முக்கிய செய்தியாக இடம் பிடித்துள்ளது. அது மட்டுமல்லாமல் ரசிகர்களை கவர்வதற்கு என்னென்ன யுத்திகளை எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாக கணக்கு போட்டு வைத்துள்ள சிவகார்த்திகேயன் விரைவில் அதை செயல்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்.

Also read:ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் படத்தின் மொத்த பிஸ்னஸ் ரிப்போர்ட்

ஏற்கனவே பிரின்ஸ் பணத்தை தீபாவளிக்கு வெளியிட்டே ஆக வேண்டும் என்ற டார்ச்சரால் கடனுக்கு மேல் கடன் வாங்கி இந்த படத்தை தயாரிப்பாளர் முடித்துள்ளார். இதில் பிரமோசனையும் வாரிசு பட ரேஞ்சுக்கு செய்ய வேண்டும் என்று கூறியதை கேட்டு தயாரிப்பாளர் மயக்கம் போடாத குறையாக இருக்கிறாராம்.

என்னதான் கெட்டிக்காரத்தனமாக இவ்வளவு பிளான் போட்டாலும் விஜய் மற்றும் தனுஷ் இடங்களை மட்டும் இவரால் தட்டிப் பறிக்க முடியாது என்று சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர். இந்த அளவுக்கு சிவகார்த்திகேயன் அலப்பறை கொடுக்கும் பிரின்ஸ் திரைப்படம் கை கொடுக்குமா அல்லது காலை வாரி விடுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

Also read:வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் ரிப்போர்ட்.. இரண்டு மடங்கு அதிகம் சம்பளம் வாங்கிய விஜய்

Trending News