Siddharth: நடிகர் சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்திற்கு பிறகு இரண்டு ஹீரோ படங்களில் நடித்தது கிடையாது. சோலோ ஹீரோவாக தன்னுடைய வெற்றி தோல்வியை பார்த்து வருகிறார். ஒருவேளை இரண்டு ஹீரோக்கள் படத்தில் நடித்த தன்னை அப்படிப்பட்ட கேரக்டரிலேயே நடிக்க அணுகுவார்களோ என்ற ஐயமும் அவருக்கு இருப்பது தெரிகிறது.
இருந்தாலும் பொதுவாக ரஜினி படம் என்று வந்து விட்டாலே கடந்த சில வருடங்களாக அதில் சிவகார்த்திகேயன் ஒரு கேரக்டர் பண்ணுகிறார் என்ற செய்தி கிளம்பி விடும். அதிலும் ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன்மையின் கேரக்டரில் நடிக்கிறார் என ரிலீஸ் தேதி வரை பேசப்பட்டது.
இந்தியன் 2 படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது என ஒரு செய்தி வெளியானது. வழக்கம் போல வதந்தியாக இருக்கும் என்று நினைத்தால் உண்மையிலேயே இந்தியன் 2 பட குழு சிவகார்த்திகேயனை அணுகி இருக்கிறது.
அந்த ஒரு காரணத்தால் இழந்த இந்தியன் 2 வாய்ப்பு
சிவகார்த்திகேயனுக்கும் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருந்திருக்கிறது. அவர் அப்போது தொடர்ந்து நிறைய படங்களில் கமிட் ஆகிய இருந்த சூழ்நிலை அவர் இந்தியன் 2 வில் நடிக்காமல் போனதற்கு காரணமாக இருக்கிறது.
அந்த கேரக்டரில் தான் சித்தார் நடித்திருக்கிறார். இந்தியன் 2 படத்திற்காக தாடியை சேவ் பண்ண வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். மற்ற படங்களில் ஒப்பந்தமாக இருக்கும் போது இப்படி ஒரு விஷயத்தை செய்ய முடியாது என்ற முக்கிய காரணமும் சிவா அந்த படத்தில் நடிக்காததற்கு ஒன்று.
இருந்தாலும் தனக்கு பிடித்த அந்த கேரக்டரில் சித்தார்த்த நடிக்கிறார் என்பதால் அவருக்கு போன் செய்து நிறைய நேரம் பேசி இருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் மன வருத்தத்தை புரிந்து கொண்டு தான் கமல் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை தயாரிப்பதற்கு முன் வந்திருக்கிறார். அப்படி உருவான படம் தான் அமரன்
- இந்தியன் 2 ட்ரெய்லரால் கமலுக்கு வந்த தலைவலி
- இந்தியன் 2 ட்ரெய்லரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள், வைரல் மீம்ஸ்
- வேட்டைக்கு தயாரான சேனாபதி