வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எல்லாமுமாய் இருந்தவரை நம்ப வைத்து கழுத்தறுத்த சிவகார்த்திகேயன்.. காற்றில் பறந்த வாக்குறுதி

சமீப காலமாக சிவகார்த்திகேயன் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது இவர் ஆரம்ப காலத்தில் தன்னை வளர்த்து விட்டவர்களையும், தன்னை நம்பியவர்களையும் தற்போது கண்டு கொள்வதே கிடையாதாம். மாஸ் ஹீரோவாகி விட்டதால் தான் அவர் இப்படி எல்லாம் மாறிவிட்டார் என்ற ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இவர் ஏற்கனவே தனக்கு வலது கை போல் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒருவரை டீலில் விட்டு வருகிறார். அதில் லேட்டஸ்ட் ஆக ஒரு தயாரிப்பாளரும் இணைந்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Also read:கொஞ்சமும் எதிர்பார்க்காமல் தோற்றுப் போன ரஜினி.. மூட பழக்கத்தை தூக்கி எறிந்த சிவகார்த்திகேயன்

பிஎஸ் மித்ரன் இயக்கியிருந்த அந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய அளவில் பரபரப்பை கிளப்பிய அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது. இதனால் படத்தை தயாரித்த கே ஜே ராஜேஷ் கடுமையான கடன் நெருக்கடிக்கு ஆளானார்.

அதற்காக சிவகார்த்திகேயன் அவருக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதாவது அவருடைய தயாரிப்பில் மீண்டும் இரண்டு படங்களில் நடித்து தருவதாக அவர் கூறியிருக்கிறார். அதை நம்பிய தயாரிப்பாளரும் இந்தப் படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பிரச்சினையை சரி செய்து இருக்கிறார்.

Also read:கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. டாப் கியரில் எகிரும் மார்க்கெட்

அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் சிங்கப்பாதை என்ற ஒரு திரைப்படம் ஆரம்பிக்கப்பட இருந்தது. ஆனால் அப்போது சிவகார்த்திகேயன் வேறு ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் சில காலம் தயாரிப்பாளரை வெயிட் செய்ய சொல்லி இருக்கிறார்.

ஆனால் இப்போது வரை சிவகார்த்திகேயன் அந்த தயாரிப்பாளருக்கு அந்த சிங்கப் பாதை படத்தை முடித்துக் கொடுக்கவில்லை. இதற்காக காத்திருந்த தயாரிப்பாளரும் தற்போது நொந்து போய் இருக்கிறார். தன்னை நம்பிய தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட சிவகார்த்திகேயன் பற்றி தான் தற்போது கோலிவுட்டில் பேசி வருகின்றனர்.

Also read:கழுத்தை நெரித்த கடன், காப்பாற்றி விட்ட தயாரிப்பாளர்.. நன்றி கடனுக்காக சம்மதித்த சிவகார்த்திகேயன்

Trending News