வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிம்புவுடன் இணைந்த சிவகார்த்திகேன், யாருமே எதிர்பார்க்கலல்ல.. சண்டைனா அது ஃபேன்ஸ் மட்டும் தான், நாங்க இல்ல

சிம்பு மாநாடு வெற்றியைத் தொடர்ந்து வேற லெவல் ஃபார்மில் உள்ளார். தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசாரி கணேஷ் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் 10வது ஆண்டு சைமா விருது வழங்கும் விழா பெங்களூரில் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட டாப் நடிகர்களும் கலந்து கொண்டனர். இதில் சிம்பு மாநாடு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்ற விருதைப் பெற்றார்.

Also Read : படு உஷாரான சிம்பு.. தனுசை வைத்து நகர்த்திய காய்

அதேபோல் டாக்டர் படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் சைமா விருதுகளில் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏனென்றால் சிம்பு, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையே போட்டியும், பொறாமையும் நிலவி வருகிறது.

Also Read : மொத்த கடனையும் அடைக்கும் நேரம் வந்தாச்சு.. பெரிய முதலைகள் கையில் சிக்கிய சிவகார்த்திகேயன்

ஏனென்றால் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் நுழைந்தவர் சிம்பு. இவருடைய இத்தனை வருட திரை வாழ்க்கையில் மாநாடு படம் மட்டும்தான் 100 கோடி வசூல் சாதனை படைத்தது.ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைந்த ஹீரோ அந்தஸ்தை பெற்று டாக்டர், டான் என 100 கோடி வசூலை பெற்றிருக்கிறார். இதனால் இந்த இரு ரசிகர்கள் இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதம் நடந்து வருகிறது.

Simbu-Sivakarthikeyan

ஆனால் போட்டி பொறாமை எல்லாம் ஃபேன்ஸ் மட்டும்தான், நாங்க எப்போதுமே நல்ல நண்பர்கள் என்பது போல மிக நெருக்கமாக சிம்பு, சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் இதை பார்த்தாவது அவர்கள் ரசிகர்களும் சண்டையிடாமல் நட்பாக பழகலாம்.

Also Read : அவரு கூப்பிட்டாருனு என் இமேஜை கெடுத்துக்க முடியாது.. ரஜினியுடன் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்

Trending News