சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக உயர்ந்திருக்கிறார்.
விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே காமெடி சரவெடி பட்டையை கிளப்பும். அதிலும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்காதவர்களே கிடையாது.
அப்படி அனைவரையும் தன்னுடைய காமெடி நடிப்பை ரசிக்க வைத்து தற்போது பக்கா கமர்சியல் ஹீரோவாக மாறியுள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த 2012ஆம் ஆண்டு பெட்ரோல் உயர்வைக் கண்டித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் கடைக்காரர் பெட்ரோல் எவ்வளவு என்று கேட்பது போலவும், அதற்கு பைக் ஓனர், இரண்டு ரூபாய்க்கு கொஞ்சம் பெட்ரோலை பைக் மேல் தெளித்து விடு, வண்டியை கொளுத்திவிட்டு போகிறேன் என்று நக்கல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தற்சமயம் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் இந்த பதிவு ரசிகர்களிடையே செம வரவேற்பு பெற்று 8 வருடம் கழித்து மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் அன்று கொடுத்த கவுண்டர் இன்று வேலை செய்கிறது என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
வழக்கம்போல் இந்த பதிவையும் சிந்திக்காமல் சிரித்து விட்டு கடந்து செல்லும் இளைய தலைமுறையினர் ஒரு முறை சிந்தித்து இந்த பதிவில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.