புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சிவகார்த்திகேயன் டானாக வெற்றி பெற்றாரா.? சுடச் சுட வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படத்தை காண்பதற்கு தற்போது ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. முதல் காட்சி ஆரம்பிக்கப்படும் முன்பே சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர்.

பிரியங்கா அருள்மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்திற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் முதல் காட்சியை பார்த்து முடித்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கு என தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

கல்லூரி கலாட்டா என மிக காமெடியாக இருக்கும் இந்தப் படத்தின் முதல்பாதி வழக்கம்போல ரசிகர்களை கவரும் வகையில் கலகலப்பாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் காட்சிகளும் ரசிக்கும்படி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

don
don

அதிலும் சிவகார்த்திகேயனின் வழக்கமான துள்ளலான காமெடியும், அப்பா, மகன் இருவருக்கும் இடையே இருக்கும் எமோஷனல் காட்சிகளும் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் இப்படம் பக்கா கமர்சியல் படமாக வெளிவந்துள்ளது.

don
don

மேலும் ஒரு ரசிகர் ரஜினியின் எந்திரன், சிவாஜி, பாட்ஷா போன்ற படங்களில் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபிச்சக்கரவர்த்தி இந்த படத்தின் மூலம் ஆடியன்சை கவர்ந்து விட்டதாகவும் ரசிகர்கள் அவரை பாராட்டுகின்றனர்.

don
don

அந்த வகையில் தற்போது கலக்கலாக வெளிவந்துள்ள டான் திரைப்படம் பல இடங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் ரசிகர்களும், பிரபலங்களும் இந்தப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

don
don

Trending News