பூவெல்லாம் உன் வாசம், துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எழில் சிவகார்த்திகேயன் நடிப்பில், மனம் கொத்திப் பறவை படத்தை இயக்கினார்.

இதில் , ஹீரோயினாக ஆத்மியா நடித்தார். ஸ்ரீ நாத், வெண்ணிற ஆடை மூர்த்தி, சிங்கம் புலி, இளவரசு, சாம்ஸ், நரேன் ஆகியோர் உடன் நடித்தனர். இப்படம் கடந்த 2012ல் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றது.

கேரளத்தைச் சேர்ந்த நடிகை ஆத்மியா 2009 ஆம் ஆண்டு வெள்ளத்தூவல் படம் மூலம் அறிமுகமானார். அதன்பின், மனம் கொத்திப் பறவை, போங்கடி நீங்களும் உங்க காதலும், அமீபா, காவியன், வெள்ளை யானை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த அவர் கடந்த 2021 ல் கண்னூரில் சனூப் கே நம்பியாரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின் எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் சினிமாவை விட்டு விலகியிருந்தார் ஆத்மிகா.
அழகும் திறமையும் கொண்ட ஆத்மிகா மீண்டும் தமிழ் படங்களில் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.