வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிவகார்த்திகேயன் படத்திற்கு மட்டும் விதிவிலக்கா?. விஜய் படத்திற்கு எழுந்த பிரச்சனை

Actor Siva Karhikeyan: தன் நகைச்சுவையாலும், நடிப்பாலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் சிவகார்த்திகேயன். மேலும் தன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் இவரின் படங்களை காட்டிலும், விஜய் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்த தகவலை இங்கு காண்போம்.

டாக்டர், டான் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மேற்கொள்ளும் படம் தான் மாவீரன். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் சாய்ராம் காலேஜில் ஜூலை 2 ஆம் தேதி நடைபெற உள்ளதாம்.

Also Read: 80 லட்சத்தை இழந்த விஜய் பட நடிகை.. கூடவே இருந்து குழி பறித்த மேனேஜர்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் எப்பொழுதுமே தன் படத்தின் ஆடியோ லான்ச் ஜே பி ஆர் காலேஜ் இல் தான் நடத்துவார். அவ்வாறு தான் இவரின் படமான டான் மற்றும் பிரின்ஸ் பாடத்தின் ஆடியோ லான்ச் இங்கு நடைபெற்றது. அதை ஒரு சென்டிமென்ட் ஆகவே வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் இம்முறை புதிதாக சாய்ராம் காலேஜில் நடைபெற போவதாக கூறுவது ஏன் என்று கேள்வியை முன்வைத்து வருகிறது. இது குறித்து பார்க்கையில் ஏற்கனவே ஒருமுறை விஜய்யின் பிகில் படத்தின் ஆடியோ லான்ச் சாய்ராம் காலேஜில் நடைபெற்றது. அப்பொழுது அப்படம் அரசு ரீதியான பிரச்சனையும் சந்தித்தது.

Also Read: நம்ம சண்டை செய்யும்போது நம்ம பக்கம் நியாயம் இருக்கணும்.. ஆண்டவர் கொடுத்த அட்வைஸ்

அதனால் அப்போதைய கவர்மெண்ட் கல்வி நிர்வாகத்திற்கு இது போன்ற சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் இங்கே நடத்தலாமா என்றும் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் தற்பொழுது சிவகார்த்திகேயன் படத்திற்கு அப்படியே உல்டாவாக நடந்து வருகிறது.

அவ்வாறு பார்க்கையில் சிவகார்த்திகேயன் படத்திற்கு மட்டும் என விதிவிலக்கா? மேலும் விஜய் என்ன செய்தாலும் அரசியல் கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறது. எங்கே இவருக்கு நாளடைவில் ஆதரவு பெறுகிடுமோ என்ற ஒரு பயத்தில் தான் இது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.

Also Read: வாய்ப்பு மட்டும் தாங்க என்ன வேணாலும் செய்கிறேன்.. பார்ட்டி பார்ட்டியாக செல்லும் தளபதி பட நடிகை

Trending News