புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஒரே கதையில் உருவாகியுள்ள 2 படங்கள்.. பயத்தில் மாவீரன் சிவகார்த்திகேயனை முந்தும் இளம் ஹீரோ

மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ஆகஸ்ட் மாதம் தான் ஜெயிலர் படமும் வெளியாகும் என கூறப்பட்டது.

அதேபோல் ஆகஸ்ட் 10 சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகிறது. இதனால் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியது. அதாவது ஆரம்பத்தில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் அறிவித்த நிலையில் முன்கூட்டியே ஜூலை 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறியிருந்தனர்.

Also Read : சக நடிகர்களை தூக்கி விட்ட 6 ஹீரோக்கள்.. வளர்த்து விட்ட வரை மாரில் முட்டிய சிவகார்த்திகேயன்

ஆனால் இப்போது சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைக்கும் படி மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. மாவீரன் கதையிலேயே இன்னொரு படம் உருவாகி இருக்கிறதாம். அந்தப் படத்தை சிவகார்த்திகேயன் படத்திற்கு முன்னதாகவே வெளியிட இருக்கிறது. இதனால் மாவீரன் படத்திற்கு மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்த ஆதி தற்போது மரகத நாணயம் படத்தின் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவாகும் வீரன் படத்தில் நடித்துள்ளார்.

Also Read : ஓவராக ஆட்டம் காட்டிய சிவகார்த்திகேயன்.. சரியான நேரத்தில் செக் வைத்த சன் பிக்சர்ஸ்

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் வீரன் படமும் மாவீரன் கதை போல தான் எடுக்கப்பட்டிருக்கிறதாம். ஆகையால் ரேஸில் முந்திக் கொண்டுள்ளார் ஹிப் ஹாப் ஆதி.

அதாவது வீரன் படம் வருகின்ற ஜூன் 2 ஆம் தேதியே வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு மாவீரன் படத்தை சிவகார்த்திகேயன் பெரிதும் நம்பி உள்ளார். ஆனால் அவருக்கு சோதனையாக ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படம் அமைய உள்ளது.

Also Read : பாரி வள்ளலாக மாற ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. வாரிசு நடிகையை வைத்து அப்பாவுக்கு விட்ட தூது பலிக்குமா!

Trending News