சுதா கொங்கராவின் புறநானூறு படம் தான்1965 என்று டைட்டில் மாற்றி உள்ளனர். அந்த காலகட்டத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக, படத்திற்கு இந்த டைட்டில் வைத்துள்ளனர். சென்னையில் தான் இந்த படம் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
பெயர் போன பச்சையப்பாஸ் காலேஜ் எதிர்புறம் அமைந்துள்ள பள்ளியில் தான் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. காலையில் 6 மணிக்கெல்லாம் சுதா கொங்காரா அங்கே வந்து விடுகிறாராம் ஏழு மணிக்கு ஃபர்ஸ்ட் சாட் எடுக்கின்றனர்.
இந்த படப்பிடிப்பில் ஸ்பாட்டில் கிட்டத்தட்ட மூன்று கேரவன்கள் நிற்கின்றது. ஒன்று ஹீரோ சிவகார்த்திகேயனுடையது மற்றும் இரண்டு வில்லன் ஜெயம் ரவி, டைரக்டர் சுதா கொங்காரா ஆகியோர்களுக்கு உண்டானது.
சிவகார்த்திகேயன் கேரவன் அருகில் அவருடைய ஆஃபீஸ் ஒன்றை போட்டுள்ளார். ஷாட் முடிந்த பிறகு நேராக அந்த ஆபீசுக்கு வந்து விடுகிறாராம். அங்கேதான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை. ஏகப்பட்ட படங்களை கமிட் செய்து வைத்திருக்கிறார். அதில் எந்த படத்திற்கு ஆபீஸ் போட்டுள்ளார் என்பது தெரியவில்லை.
தற்போது இந்த படத்தில் ஓவர் அலப்பறை காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். அர்ப்பணுக்கு கிடைத்த வாழ்வு என்பது போல் சிவகார்த்திகேயன் இப்படி நடந்து கொள்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி அமைதியாக வந்து நடித்து முடித்த பிறகு கேரவன் செல்கிறாராம்.