வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Sivakarthikeyan : அஜித்தால் முதலுக்கே மோசம்.. மீண்டும் கடனில் தத்தளிக்க போகும் சிவகார்த்திகேயன்

அஜித் இப்போது விடாமுயற்சியில் நடித்து வரும் நிலையில் அவருடைய படத்தால் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படப்போகிறது. சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்தபடியாக ஏ ஆர் முருகதாஸ் படத்தில் கமிட்டாகி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் நடிப்பில் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் இப்போது மீண்டும் படங்களை தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்.

முன்பு எஸ்கே புரொடக்ஷனால் படம் நஷ்டம் ஆகி கடனில் தத்தளித்தார். டாக்டர் மற்றும் டான் படங்களின் வெற்றியால் அந்த கடனை அடைத்த நிலையில் இப்போது காளி வெங்கட் நடிப்பில் உருவாகி இருக்கும் குரங்கு பெடல் படத்தை தயாரித்துள்ளார்.

ரீ ரிலீஸால் சிவகார்த்திகேயன் சந்திக்கும் பிரச்சனை

இந்தப் படம் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்கள் நல்ல வசூலை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கில்லி படம் தியேட்டரில் பட்டையை கிளப்பியது.

அதேபோல் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மங்காத்தா, பில்லா, தீனா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றனர். இதனால் புதுவரவாக வெளியாகும் படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாது.

இதில் சுந்தர் சியின் அரண்மனை 2 படமும் வெளியாகிறது. ரீ ரிலீஸ் படங்களால் புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மொத்த கோடம்பாக்கமும் அதிருப்தியில் இருக்கிறது.

அஜித் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும் நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகும் குரங்கு பெடல் படம் வசூலை அள்ளுமா என்பது சந்தேகம் தான். இதனால் மீண்டும் கடனில் சிவகார்த்திகேயன் தத்தளிக்க வாய்ப்பு இருக்கிறது. இதை எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்போம்.

Trending News