வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

100 கோடி வசூல் மன்னன் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு.. 38 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் வந்தாலும் டாப் நடிகர்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார். ஆரம்பத்தில் அவர் சந்திக்காத அவமானங்களே இல்லை. பெரிய ஹீரோக்களிடமிருந்து இவருக்கு குடைச்சலும் வந்தது. அதிலிருந்து மீண்டு தனது ரசிகர்களால் இப்போதும் சினிமாவில் நிலைத்து நிற்கிறார்.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் ஆவரேஜ் படங்களாக இருந்தாலும் தற்போது மாஸ் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் டாக்டர், டான் என அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்களை கொடுத்திருந்தார். ஆனால் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

Also Read : ஜெயிலர் படத்தில் வந்த காசை சிவகார்த்திகேயன் என்ன செய்தார் தெரியுமா.? பலரையும் கலங்க வைத்த சம்பவம்

இப்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு தற்போது 38 வயது ஆகிறது. இவருடைய சொத்து மதிப்பை பற்றி பார்க்கலாம். தனுசுக்கு இப்போது 160 கோடி சொத்து மதிப்பு உள்ளது. ஆனால் அவருக்குப் பின்பு குறுகிய காலத்தில் வந்தாலும் சிவகார்த்திகேயன் நிறைய சம்பாதித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு 110 கோடியாகும். இப்போது அவர் ஒரு படத்திற்கு 35 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம். மேலும் தொடர் வெற்றி படங்களால் அவரது சம்பளமும் அதிகமாக வாய்ப்புள்ளது. விஜய், அஜித் போன்ற நடிகர்கள் ஒரு படத்திற்கே தற்போது 100 கோடி தாண்டி சம்பளம் பெற்று வருகிறார்கள்.

Also Read : ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் செய்ய போகும் சம்பவம்.. ரஜினி கொடுத்த அந்த வாய்ப்பு

அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் இடம்பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகையால் இன்னும் இரண்டு மூன்று வருடங்களிலேயே சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு மூன்று நான்கு மடங்கு அதிகமாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு தனது சொந்த ஊரில் பிரம்மாண்ட வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்திருந்தார்.

மேலும் சிவகார்த்திகேயன் குடும்பம் ரியல் எஸ்டேட் போன்ற மற்ற தொழில்களிலும் ஈடுபட்ட வருகிறார்கள். திறமை இருந்தால் எவ்வளவு பெரிய உயரத்தையும் அடையலாம் என்பதற்கு சிவகார்த்திகேயன் எடுத்துக்காட்டாக உள்ளார். மேலும் அவருடைய விடாமுயற்சி இன்னும் அவரை மிகப் பெரிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும்.

Also Read : வாங்கிய அடியால் அனைத்திலும் மூக்கு நுழைக்கும் சிவகார்த்திகேயன்.. அப்செட்டில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்

- Advertisement -spot_img

Trending News