வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வாழ்த்து சொன்ன சூரியை மரண பங்கம் செய்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் பதிவால் வயிறு குலுங்கி சிரிக்கும் ரசிகர்கள்!

கோலிவுட்டில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படமும் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது.

தற்போது சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ‘டான்’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.

இந்த படத்தில் சமுத்திரகனி, பிரியங்கா மோகன், sj சூர்யா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்த சூரியை, சிவகார்த்திகேயன் பங்கம் செய்திருக்கும் தகவல்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

don-movie-artists
don-movie-artists

அதாவது சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ‘டான்’ திரைப்படத்தில் சூரியும் நடிக்க ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளாராம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இது குறித்து சூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘மீண்டும் சிவகார்த்திகேயனுடன் திரையை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் சந்திப்போம் நண்பா!’ என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ‘நண்பா போஸ்ட ஒழுங்கா படிங்க.. ஸ்பெல்லிங் மிஸ்டேக் அதிகமா இருக்கு’ என்று பதிவிட்டிருக்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் அலப்பறைகள் படம் தொடங்குவதற்கு முன்பே ஆரம்பித்து விட்டதாக தெரிவித்து வருகின்றனர்.

Trending News