செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. ரத்தம் தெறிக்கும் சிவகார்த்திகேயனின் SK21 டைட்டில் டீசர்

SK21 Title Teaser: கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ் கே 21 உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயின் ஆக நடிக்கிறார். மிகப்பெரும் கூட்டணியாக இருக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என ஒரு பக்கம் விவாதத்தை ஆரம்பித்துள்ளனர். நாளை சிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக டீசர் மாஸாக வெளிவர இருக்கிறது.

ஏற்கனவே இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் கடுமையாக பயிற்சி எடுத்த வீடியோ வெளியாகி வைரலானது. அதில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன் துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.

Also read: விடாமல் துரத்தும் ஏழரைச் சனி.. சிவகார்த்திகேயன் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்

அது வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டைட்டில் டீசர் அட்டகாசமாக வெளியாகி உள்ளது. வீடியோவின் ஆரம்பத்திலேயே காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் காட்டப்படுகிறது. அதை தொடர்ந்து ராணுவ படையும், சிவகார்த்திகேயனின் அறிமுகமும் ஃபயராக இருக்கிறது.

அச்சமில்லை அச்சமில்லை என்ற பின்னணியில் காஷ்மீரில் நடக்கும் கலவரம், குண்டுவெடிப்பு அனைத்தும் பயங்கரமாக இருக்கிறது. அதற்கு வலு சேர்ப்பது போல் பின்னணி இசையால் ஜிவி பிரகாஷ் மிரட்டியுள்ளார். காஷ்மீர் என்றாலே இப்படித்தான் என்ற ஒரு பிம்பம் இருக்கிறது.

Also read: சிவகார்த்திகேயன் கிரீன் சிக்னல் காட்டியும் 3 வருஷத்துக்கு பின் டேக்ஆப் ஆன பிளைட்.. ரஜினிகிட்ட போய் வந்தும் கிடப்பில் போட்டது

அதை அப்படியே பிரதிபலித்திருக்கும் இந்த டீசரில் சிவகார்த்திகேயனின் நடிப்பு அர்ப்பணிப்பாக இருக்கிறது. நிச்சயம் இப்படம் அவருடைய திரை வாழ்வில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு வெறித்தனமாக வெளிவந்திருக்கும் இந்த டீசரில் படத்தின் பெயர் அமரன் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Trending News