வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வெற்றிக்கு வாழ்த்து கூட சொல்ல மாட்டாங்க.. டான் சக்சஸ் மீட்டிங்கில் கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன்

சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் 100 கோடி வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா அருள்மோகன், சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர்.

டான் படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கேப் புரோடக்சன் மற்றும் லைகா இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட்டிங் சமீபத்தில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் தன்னுடைய உருக்கமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

அதாவது இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வெற்றிப் படங்கள் வெளியாகி இருந்தும் ஒருவர் கூட அவரைப் பாராட்டியது கிடையாதாம். இந்நிலையில் டான்  படத்தின் வெற்றிக்கு சூப்பர் ஸ்டார், சிம்பு என பல பிரபலங்கள் இடம் இருந்து பாராட்டுக்கள் வந்ததாக சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.

மேலும், ரஜினி டான் படக்குழுவை தன் வீட்டுக்கு அழைத்து கிட்டதட்ட 60 நிமிடங்கள் பேசியதாக சிவகார்த்திகேயன் கூறினார். முதல் ஐந்து நிமிடங்கள் படத்தில் பணியாற்றிய அனைவரையும் நினைவுகூர்ந்து பாராட்டியதாக கூறினார்.

மேலும் டான் படத்தின் 100 கோடி வசூலை தாண்டியதால் பலரும் ரீட் கேட்பதாக கூறிய சிவகார்த்திகேயன், டான் படத்தின் வசூலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை லைக்கா மற்றும் உதயநிதிக்கு தான் அதில் பங்கு உள்ளது. அவர்கள் ட்ரீட் வைத்தால் நானும் கலந்து கொள்வேன் என சிவகார்த்திகேயன் கலகலப்பாக பேசினார்.

மேலும், இனி தன் மகள் ஆராதனா உடன் நேரத்தை செலவிடுவேன் என வாக்குறுதி கொடுத்தார். ஏனென்றால் டான் படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியதால் சரியான நேரத்தை குடும்பத்திற்காக சிவகார்த்திகேயனால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் தற்போது படங்களில் நடிக்க மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Trending News