வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஜால்ரா போட ஒரு நியாயம் வேணாமா.. சிவகார்த்திகேயனை வச்சி செய்யும் நெட்டிசன்கள்

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் முக்கியமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கடந்த சில வருடங்களில் அவருடைய வளர்ச்சி யாரும் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திற்கு சென்று உள்ளது. அதுமட்டுமில்லாமல் விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்றோர் மட்டுமே 100 கோடி வசூலைத் தொட்ட நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் 100 கோடி வசூல் செய்துள்ளது அனைவருக்கும் ஒருவிதமான பீதியை உண்டாக்கி உள்ளது.

மேலும் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டருக்கு மக்களை அழைத்து வந்த பெருமை டாக்டர் படத்திற்கு உண்டு என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இத்தனைக்கும் டாக்டர் படமும் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தியேட்டரில் வெளியானது என்பதை முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்றாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து மிகப் பெரிய எதிர்பார்ப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. உண்மையாகவே இந்த படம் சுமாராகத்தான் இருப்பதாக ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ சிறுத்தைசிவா சீரியல் எடுக்க போய்டலாம் என வெறுத்து போயி ரஜினி ரசிகர்களே சொல்லுமளவுக்கு சிவா ரொம்ப சோதித்து விட்டார் எனவும் சொல்கிறார்கள்.

படம் சுமார் தான் என தெரிந்தாலும் குடும்பம் குடும்பமாக கூட்டம் மட்டும் குறையவில்லை. இந்நிலையில் சக நடிகர் என்பதாலும் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதாலும் அண்ணாத்தே முதல் நாள் முதல் காட்சி பார்த்த சிவகார்த்திகேயன் போட்ட பதிவு தற்போது அவருக்கு வேட்டு வைக்கும் இடமாகவும் கிண்டல் செய்யும் விதமாகவும் அமைந்து விட்டதால் கோலிவுட் வட்டாரத்தில் இன்றைக்கு காதை கடிக்கும் விஷயமாகிவிட்டது.

sivakarthikeyan-fans-comments
sivakarthikeyan-fans-comments

அண்ணாத்த படம் வேற லெவல் தலைவர் வேற ரகம் என இஷ்டத்துக்கு சிவகார்த்திகேயன் ரஜினியின் ரசிகர் என்பதால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் போட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் முட்டு கொடுப்பதற்கு ஒரு நியாயம் வேண்டாமா, இப்படியா ஜால்ரா அடிப்பது என சிவகார்த்திகேயனை கிண்டல் செய்து வருகின்றனர். இவர்கள் கொடுக்கும் பில்டப்பினால் ரொம்ப எதிர்பார்த்து போய்ட்டு ஏமாறுவதுதான் கோவமே. அனைவரும் பேசாமல் இருந்தாலே படம் நன்றாக ஓடும், ஓடி கொண்டிருக்கிறது என ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் சொல்கிறார்கள். அண்ணாத்த படம் சுமாராக இருந்தாலும் அதனுடைய வசூல் நன்றாகவே இருக்கிறது என்கிறார்கள் திரையரங்க வட்டாரங்கள்.

Trending News