தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகுமார். இவர் நடிகர் என்பதை தாண்டி சிறந்த ஓவியர், பேச்சாளர் மற்றும் கம்பராமாயண சொற்பொழிவாளராகவும் திகழ்ந்து வருகிறார். இப்படி பல பரிமாணகங்களில் வலம் வரும் சிவகுமார் தமிழ் சினிமாவில் காக்கும் கரங்கள் என்ற படம் மூலம் 1965ஆம் ஆண்டு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி, வண்டிச்சக்கரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ள சிவகுமார் தமிழ் சினிமாவில் இதுவரை 190 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் இதில் 10 அல்லது 15 படங்கள் தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் ஹீரோவாக நடித்தது சில படங்கள் மட்டுமே. அப்பா அண்ணன் போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்தது தான் அதிகம். இவரது படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாதபோதும் சினிமாவில் நடித்தால் போதும் என்ற எண்ணத்தில் காலத்தை ஓட்டினாராம்.
ஒரு கட்டத்தில் படங்களில் இவருக்கு வரவேற்பு குறைந்ததால் சின்னத்திரை அதாவது சீரியலில் களமிறங்கி விட்டார். அந்த வகையில் நடிகை ராதிகா உடன் இவர் இணைந்து நடித்த சித்தி என்ற சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த சீரியல் மூலம் தான் இவருக்கும் ஓரளவிற்கு நல்ல பெயர் கிடைத்தது.
அவ்வளவு ஏன் சித்தி சீரியலில் நடித்த பின்னர் தான் சிவகுமார் கார் வாங்கினார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அத்தனை ஆண்டுகள் வெள்ளித்திரையில் இருந்து இவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் ஒரே ஒரு சீரியலில் கிடைத்து விட்டது. அதனால் தொடர்ந்து அண்ணாமலை என்ற மற்றொரு சீரியலிலும் சிவகுமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.