தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் என்ற அடைமொழியுடன் வலம் வருபவர் நடிகர் சிவகுமார். சினிமா, சின்னத்திரை என அனைத்திலும் தன்னுடைய முத்திரையை பதித்தார். அதுமட்டுமில்லாமல் ஓவியம் வரைவது, யோகா செய்வது போன்ற தனி திறமைகளும் அவருக்கு நிறைய உண்டு.
சமூகத்தில் பொறுப்புள்ள மதிக்கத்தக்க மனிதராக வலம் வரும் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
சமுதாயத்தில் சிவகுமாருக்கு எவ்வளவு பெரிய நல்ல பெயர் இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் அவரது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக ஹிப்ஹாப் ஆதி நடந்து கொள்வது சரி இல்லை என்கிறது சூர்யா வட்டாரம்.
அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல்கள் என பன்முகத் திறமையாளராக மீண்டும் களமிறங்கும் திரைப்படம்தான் சிவகுமாரின் சபதம்.
இந்த டைட்டில் வைக்கும்போதே சூர்யா குடும்பம் கொஞ்சம் சங்கடத்தில் தான் இருந்ததாம். இந்நிலையில் சிவகுமாரின் பொண்டாட்டி என்ற பெயரில் பாடல் வெளியிட்டு மேலும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
யதார்த்தமாக அமைந்த டைட்டிலாக இருந்தாலும் டீசண்டாக இல்லாமல் சிவக்குமாரின் பொண்டாட்டி, அது இது என ஆரம்பத்திலேயே இப்படி இருக்கிறது. இன்னும் படம் வெளிவந்தால் சிவகுமாரின் பெயர் எவ்வளவு நாறப்போகிறதோ தெரியவில்லை என சூர்யா மற்றும் கார்த்தி தரப்பு மிகவும் உன்னிப்பாக ஹிப் ஹாப் தமிழா ஆதி செய்வதை கவனித்து வருகிறார்களாம்.