செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நீங்க எல்லாம் வரலைன்னு யாரு அழுதா.? விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார், கார்த்தி

Vijayakanth-Karthi: விஜயகாந்த் நம்மை விட்டு சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும் அவருடைய மறைவை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை நல்லடக்கம் செய்த இடத்தில் கூட்டம் கூட்டமாக கண்ணீர் விட்டு கதறும் மக்களே இதற்கு உதாரணம்.

அந்த அளவுக்கு கேப்டனின் இறப்பு ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் பெரும் தாக்கமாக அமைந்திருக்கிறது. ஆனால் சக கலைஞர்களுக்கு அதைப்பற்றி எந்த கவலையும் இல்லை. புத்தாண்டு கொண்டாட்டம் தான் முக்கியம் என்பது போல் பல நடிகர்கள் வெளிநாட்டில் ஜாலியாக பொழுதை கழித்துள்ளனர்.

தற்போது புத்தாண்டு கோலாகலம் அனைத்தும் முடிந்த நிலையில் ஒவ்வொருவரும் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அதில் சிவக்குமார் மற்றும் கார்த்தி இருவரும் தற்போது கேப்டன் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Also read: கேப்டனை அடுத்து கலைஞரை அவமதிக்கும் 6 நடிகர்கள்.. வெளிநாட்டிலேயே டேரா போட்ட விஷால்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, கேப்டன் நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இது வாழ்நாள் முழுவதும் ஒரு குறையாகவே இருக்கும். நடிகர் சங்கத்தில் நாங்கள் பல சவால்களை சந்தித்தபோது அவரை தான் நினைத்துக் கொள்வோம்.

ஒரு தலைவன் என்றால் இறங்கி நின்று வேலை செய்ய வேண்டும் என்பதற்கு அவரே உதாரணம். எப்பவும் அவரை மிஸ் செய்து கொண்டே இருப்போம் என குரல் தழுதழுக்க பேசினார். ஆனால் இது அனைத்தும் மனதில் இருந்து வந்த வார்த்தையாக தெரியவில்லை. இதைத்தான் ரசிகர்களும் இப்போது கிழி கிழி என கிழித்து வருகின்றனர்.

நீங்க எல்லாம் வரலைன்னு யாரு அழுதா? இப்ப வந்து எதுக்கு முதலை கண்ணீர் வடிக்கிறீங்க? ஒரு நல்ல மனிதனின் இறப்பை விட புத்தாண்டு கொண்டாட்டம் உங்களுக்கு முக்கியமா? என சரமாரியாக அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். கார்த்தியை தொடர்ந்து அடுத்தடுத்த நடிகர்களும் இன்று விஜயகாந்த் சமாதிக்கு வந்து நீலி கண்ணீர் வடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Also read: விஜயகாந்த் இறப்புக்கு வருத்தம் தெரிவிக்க முடியல.. ஆனா நல்லா குத்தாட்டம் போட்ட அஜித்

Trending News