வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பெருமை பீத்திய ஹிப்ஹாப் தமிழா ஆதி.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. தேவையா பாஸ்!

கடந்த சில வருடங்களில் வெளிவந்த பாடல்களில் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட பாடலாக மாறியுள்ளது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சிவக்குமார் பொண்டாட்டி பாடல். மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு மீண்டும் இயக்கி நடித்து வருகிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

அந்த படத்திற்கு சிவக்குமார் பொண்டாட்டி என டைட்டில் வைத்துள்ளனர். இதுக்கே சூர்யா குடும்பத்தில் பல பஞ்சாயத்துகளாம். ஆனால் எதுவும் வெளியில் வராமல் அப்படியே மூடி மறைத்து விட்டனர்.

இது ஒருபுறமிருக்க சிவகுமார் பொண்டாட்டி என்ற பாடல் வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் அதிகம் கேலி கிண்டல்கள் செய்யப்பட்டு வருகிறது. பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது எனவும் ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

youtube-comments
youtube-comments

மேலும் மீம்ஸ் கிரியேட்களும் தங்கள் பங்குக்கு ஒரு பக்கம் வச்சு செய்ய, அந்த பாடல் வெளியான யூடியூப் தளத்தின் கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் போடும் ஒவ்வொரு கமெண்ட்டும் அவ்வளவு ரசிக்கும்படி உள்ளது.

கடந்த சில வருடங்களில் தமிழ் சினிமாவில் பெரிய அளவு காமெடி இல்லை என வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் பாடலின் கமெண்டுகள் திருப்தி தரும் என்றே நம்பலாம். அந்த அளவுக்கு தரமான செய்கை.

youtube-comments-01
youtube-comments-01

போதாக்குறைக்கு ஒரே நாளில் ஒரு லட்சம் லைக்குகள், ஒரு மில்லியன் பார்வையாளர்கள், யூடியூபில் நம்பர் ஒன் டிரன்டிங் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெருமை பேசினார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இதைப்பார்த்த ரசிகர்கள் அங்கேயும் அவரை விட்டு வைக்கவில்லை. அது எல்லாமே கிண்டலடிக்கப்பட்டதை பார்த்து அவ்வளவு கேவலமான பாட்டா? என்று பார்க்க வந்த ரசிகர்கள் எனவும் கூறி வருகின்றனர்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்த தனி ஒருவன் படத்தை இயக்கிய ஜெயம் ராஜாவிடம், ரசிகர்கள் உண்மையாலுமே இந்த படத்திற்கு இவர்தான் இசையா? என்று கேட்கும் மீம் செம வைரல் ஆகி விட்டது.

meme-01
meme-01

Trending News