புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவகுமாரை வசீகர படுத்திய 46 வயது நடிகை.. வைஜெயந்திமாலா உடன் ஒப்பிட்டு புகழாரம்

தமிழ் நடிகர்களில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் சிவகுமார். தற்போது வரை உணவு மற்றும் உடற்பயிற்சி வாயிலாக தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். மேலும் சினிமாவில் சர்ச்சைகளில் சிக்காமல் கண்ணியமாக வாழ்ந்தவர் என்றால் அது சிவகுமார் தான்.

இந்நிலையில் சிவகுமார் பழம்பெரும் நடிகையான வைஜெயந்திமாலா உடன் 46 வயது நடிகையை ஒப்பிட்டு பேசியுள்ளார். வைஜெயந்திமாலா இந்திய அளவில் அனைவராலும் அறியப்பட்ட கூடிய ஒரு நடிகை. கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் என பலவற்றில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் சிவக்குமார் கலந்து கொண்ட போது வைஜெயந்திமாலாவுடன் சிம்ரனை ஒப்பிட பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும் தளபதி விஜய்க்கு இணையாக நடனம் ஆடக் கூடிய ஹீரோயின் என்றால் சிம்ரன் தான் என்ற பெருமை அவருக்கு உண்டு.

தற்போது ஹீரோயினாக நடிக்க முடியவில்லை என்றாலும் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை திறம்பட செய்து வருகிறார். இந்நிலையில் சிவகுமார் பேசுகையில் என்னுடைய 60 ஆண்டுகளில் எல்லா லட்சணமும், சிலை வடிக்கும் அழகும் கொண்டவர் நடிகை வைஜெயந்திமாலா தான்.

தற்போது அவரைப்போலவே பெண்களுக்கான அனைத்து குணங்களும் கொண்ட அழகான தோற்றமும், கயல்விழிகளும், முத்துப்பல் அணிவகுப்பு, அழகான புருவங்களும், கூர்மையான மூக்கும், நீண்ட தடைகளும் கொண்ட ஒரே நடிகை சிம்ரன் மட்டும்தான் என கூறி உள்ளார்.

எந்த சர்ச்சையிலும் சிக்காத சிவக்குமார் இவ்வாறு சொல்லியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் சிம்ரன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் தான் என்ன சிம்ரனின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News