வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024

சொத்தே வேண்டாம்.. வள்ளல் பரம்பரையை சேர்ந்த நடிகர் சிவராஜ் குமார்

நடிகர் சிவராஜ் குமாருக்கு சமீபத்தில் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு, தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் நடிகர் சிவராஜ் குமார் நடித்த பைரதி ரணகள் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஜெயிலர்-2 வில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தளபதி 69 படத்தில் நடிப்பார் என்ற செய்திகள் வெளியானது.

ஆனால் அந்த செய்திகள் வெளியான சில நாட்களிலேயே, தான் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று உறுதியாக கூறிவிட்டார். இப்படி பட்ட சூழ்நிலையில் தான் இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

இரண்டு சிகிச்சை அமர்வுகள் முடிந்துள்ள நிலையில், இன்னும் சில அமர்வுகள் உள்ளது. இப்படி பட்ட சூழ்நிலையில் தான் இவர் பற்றிய ஒரு தகவல் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது.

சொத்தே வேண்டாம்

நடிகர் சிவராஜ் குமார் ஒரு பரம்பரை பணக்காரர். அவரது தந்தை அவருக்காக சொத்து சேர்த்து வைத்தார். இருப்பினும் அது எதுவும் தனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் சம்பாதித்து உருவாக்கிய சொத்து மட்டும் போதும் என்றும் கூறியுள்ளார். இப்படி சொன்னதோடு மட்டும் இல்லாமல், அவர் செய்த செயல், ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்துள்ளது.

தனது பூர்வீக சொத்து, தனது அப்பா சம்பாதித்த சொத்து அனைத்தையும் அனாதை இல்லங்களுக்கு எழுதி வைத்திருக்கிறார். தான் சம்பாதித்த சொத்து மட்டும் போதும் என்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இது உண்மையில் பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்.. ஏன் என்றால், பெரிய பெரிய நடிகர்கள் யாரும் செய்யாத ஒரு விஷயத்தை இவர் துணிச்சலாக செய்திருக்கிறார்.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பெருமை அடைந்தது மட்டுமின்றி, அவர் சீக்கிரம் நலம் பெற்று வர வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவருக்கு fan-ஆக இருப்பதில் மிகுந்த பெருமை அடைந்ததாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News