ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

எப்பொழுதுமே நல்லவர்களை சோதிக்கும் கடவுள்.. எமனை வெல்ல அமெரிக்கா கிளம்பிய சிவராஜ் குமார்

ராஜ்குமார் கன்னட திரையுலகத்தை ஆட்சி செய்த சூப்பர் ஸ்டார். நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். இவருடைய மகன்கள் தான் புனித் ராஜ்குமார் மற்றும் சிவராஜ் குமார். இருவரும் கன்னட திரை உலகை ஆட்சி செய்தவர்கள் . இதில் புனித் ராஜ்குமார் 2021 ஆம் ஆண்டு தன்னுடைய 46 வயதில் ஹார்ட் அட்டாக் காரணமாக இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

அவர் பிரிவுக்குப் பின்னர் தான் அவரைப் பற்றி பல நல்ல விஷயங்கள் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. இவர் பல ஏழை குழந்தைகளை தத்தெடுத்து கல்வி கொடுக்கிறார், ஆதரவற்றோருக்கான இல்லங்கள் நடத்துகிறார். முதியோர் இல்லம் ஆரம்பித்து வயதானவர்களை காத்து வருகின்றார் என்பவைகள் வெளியே தெரிய ஆரம்பித்தது.

புனித் ராஜ்குமாரின் அண்ணன் சிவராஜ் குமார் இவர் கேப்டன் மில்லர், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவர் தன் தம்பி புனித் ராஜ்குமாரை விட ஒரு படி மேலே சென்று பல நன்மைகள் செய்தவர். இவரும் ஆதரவற்றோருக்கான இல்லங்கள் , ஏழை குழந்தைகள் கல்வி அறக்கட்டளை போன்றவற்றை நடத்தி வருகிறார்.

தன்னுடைய அப்பா காலத்தில் சொத்துக்களை பிரிக்கும் பொழுது அதன்மூலம் மூலம் கிடைத்த முக்கால்வாசி சொத்துக்கள் ஆதரவற்றோருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். நான் ஒரு நடிகன் என்னுடைய வாழ்க்கையை நான் நடித்து பார்த்துக் கொள்கிறேன் என பத்து வருடங்களுக்கு முன்பே மக்களுக்காக சொத்துக்களை அள்ளிக் கொடுத்தவர்.

இப்பொழுது படங்கள் நடிப்பதிலிருந்து விலகி ஆறு மாத காலம் டிரீட்மென்ட்காக அமெரிக்கா செல்கிறார். அவருக்கு ஏதோ ஒரு பெரிய பிரச்சனை இருப்பதாகவும் அதற்காகத்தான் படங்களில் இருந்து விலகுகிறார் எனவும் ஆந்திரா மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்குள்ளேயும் அவருக்கு புற்றுநோய் என வதந்தி பரவியுள்ளது. சிவராஜ்குமார் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தால் தான் உண்மையான பிரச்சனை என்னவென்பது தெரியவரும்.. தற்சமயம் அவர் கமிட்டான படங்களுக்கு வேறு ஹீரோக்களை சிபாரிசு செய்து வருகிறார்.

Trending News