சனிக்கிழமை, பிப்ரவரி 1, 2025

கயல் சீரியலில் எல்லை மீறி போன சிவசங்கரி.. எழில் எடுக்கப் போகும் முடிவு, அந்தரத்தில் ஊசலாடும் கயல்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், கயலுக்கு தொடர்ந்து பிரச்சனைகளும் சிக்கல்களும் வருகிறது. அதை சரி செய்யும் விதமாக தொடர்ந்து போராடிவரும் கயலுக்கு தற்போது எழிலின் அம்மா சிவசங்கரி மூலம் தீராத அவப்பெயர் வருவதற்கு கௌதம் சதி செய்து விட்டார்.

அதாவது ஏற்கனவே கயலை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று வெறிகொண்டு அலையும் கௌதமுடன் எழிலின் அம்மா சிவசங்கரி கூட்டணி போட்டுவிட்டார். அதன்படி சிவசங்கரிடம் எப்படியாவது இந்த முறை கயலை பழி வாங்குவதற்கு சரியான திட்டம் வைத்திருக்கிறேன்.

அதனால் கயல் அந்த சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டு சிக்க போகிறார். அத்துடன் நீங்கள் எதிர்பார்த்தபடி உங்க பையனும் திரும்ப உங்களுடன் வந்து விடுவான் என்று சொல்லிவிட்டார். உடனே கயலின் பெயரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக கௌதம், கயலை ஒரு இடத்துக்கு வர வைத்தார்.

அங்கே கௌதம் மற்றும் கயல் இருந்த நிலையில் அந்த இடத்திற்கு போலீசுக்கும் தகவலை சொல்லி வரவழைத்து விட்டார்கள். அத்துடன் அந்த இடத்தில் மற்ற ரூமில் கொஞ்சம் பெண்கள் இருந்த நிலையில் கயலை தவறாக புரிந்து கொண்டு போலீஸ் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகிறார்கள்.

அப்பொழுது கயல் என்மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லி புரிய வைக்கும் பட்சத்தில் கௌதம் நீ சொல்லிதானே நான் இந்த இடத்துக்கு வந்தேன் என்று கயல் மீது தான் எல்லா தவறும் இருப்பது போல் கௌதம் அப்படியே திசை திருப்பி விட்டார்.

இதனால் கயல் மற்ற பெண்களுடன் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்படி சுழல் ஏற்பட்டு விட்டது. மேலும் போலீஸ் கௌதமுடன் கூட்டணி வைத்திருந்ததால் கௌதமே வெளியே விட்டுவிட்டார்கள். உடனே கௌதம், சிவசங்கரிக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி கயல் உங்க பையனுடைய வாழ்க்கைக்குள் நுழையப்படியாதபடி செய்து விட்டேன்.

அதனால் மறுபடியும் எழில் உங்களுடைய வந்து விடுவார் என்று கௌதம் கூறுகிறார். இதைக் கேட்டதும் சிவசங்கரியும் சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டார். ஆனால் தன் பேச்சைக் கேட்காத எழில், கயலை கல்யாணம் பண்ணியதால் கயல் உடைய இமேஜை காலி பண்ண சிவசங்கரி ரொம்பவே எல்லை மீறி விட்டார்.

இதற்கு துணையாக இருந்த கௌதமுக்கும் சேர்ந்து பதிலடி கொடுக்கும் விதமாக எழில், கௌதமை உண்டு இல்லைன்னு ஆக்கப் போகிறார். அத்துடன் இதற்கெல்லாம் பின்னணியில் நம்முடைய அம்மா தான் என்ற விஷயம் தெரிய வரும் பொழுது என்னுடைய அம்மாவை நீ இல்லை என்று சிவசங்கரியை எழில் தலைமுழுகப் போகிறார்.

Trending News