வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மூன்று முறை திருமணம் செய்த 6 பிரபலங்கள்.. அப்பவே லட்சுமிக்கு டஃப் கொடுத்த ராதிகா

முதல் திருமண பந்தம் ஏதோ ஒரு காரணத்தினால் சரியாக அமையவில்லை என்றால் மறுமணம் செய்து கொள்கிறார்கள். அதுவும் சரியில்லை என்றால் அடுத்த திருமணம். இது ஒரு பக்கம் இருந்தால் காதல் அல்லது ஈடுபாடு காரணமாக சிலர் மறுமணம் செய்து கொள்கிறார்கள். அவ்வாறு மூன்று திருமணங்கள் செய்து கொண்ட 6 பிரபலங்களை தற்போது பார்க்கலாம்.

கருணாநிதி : கலைஞர் கருணாநிதி சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். அதன்பின் அரசியலிலும் ஆட்சி செய்துள்ளார். இந்நிலையில் கலைஞரின் முதல் மனைவி பத்மாவதி. அவர் இறந்த பின்பு தயாளு அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்பு ராசாத்தி என்பவரை திருமணம் செய்தார்.

எம்ஜிஆர் : சினிமா, அரசியல் என இரண்டிலும் தனது பங்களிப்பை ஆற்றியவர் எம்ஜிஆர். இவர் பார்கவி என்கிற தங்கமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணமான அடுத்த ஆண்டே நோய்வாய்ப்பட்ட இறந்ததால் சதானந்தவதியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் சில காரணங்களால் அவரும் இறந்து போக ஜானகி என்பவரை காதலித்து எம்ஜிஆர் திருமணம் செய்து கொண்டார்.

ஜெமினி கணேசன் : காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கும் மூன்று மனைவிகள் தான். இவர் தனது 19-வது வயதில் அலமேலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் பல படங்களில் நடிக்க தொடங்கியதில் நடிகை புஷ்பவள்ளியை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து ஜெமினி கணேசன் உடன் அதிக படங்களில் நடித்த சாவித்திரியை திருமணம் செய்து கொண்டார்.

லட்சுமி : நடிகை லட்சுமி பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணத்தில் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் பாஸ்கர் உடன் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மலையாள நடிகர் மோகன் என்பவரை மணந்தார். இது விவாகரத்தில் முடிய அதன்பின்னர் இயக்குனர் சிவச்சந்திரன் மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

ராதிகா : பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான பிரதாப் போத்தனை ராதிகா முதலில் திருமணம் செய்து கொண்டார். இந்த வாழ்க்கை சரியாக அமையாததால் லண்டனை சேர்ந்த ரிச்சர்டு என்பவரை இரண்டாவதாக மணந்தார். அந்த வாழ்க்கையும் தோல்வியில் முடிய கடைசியாக சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கமலஹாசன் : உலகநாயகன் கமலஹாசன் வாணி என்பவரை முதலில் திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்துவிட்ட நடிகை சரிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு சிறிது காலம் கௌதமியுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால் தற்போது கௌதமியும் கமலஹாசனை விட்டு பிரிந்துவிட்டார்.

Trending News