புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித் மனதில் இடம் பிடித்த 6 ஹீரோயின்கள்.. கிசுகிசுக்கு ஆளான சந்தன நடிகை

ஒவ்வொருவரும் அவர்கள் இளமைப் பருவத்தில் இவரை காதலித்தால் நன்றாக இருக்கும் அவர்களே வாழ்க்கை துணையாக வந்தால் சிறப்பாக அமையும் என்ற ஆசைப்பட்டு மனதில் ஒரு கனவு கோட்டையை கட்டி இருப்பார்கள். இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிற ஒரு இயல்பான விஷயம். அப்படித்தான் அஜித்தின் இளமைப் பருவத்தில் அவருடைய மனதில் சில ஹீரோயின்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

ஹீரா: இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் இதயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நடித்த முதல் படத்திலேயே இவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து நீ பாதி நான் பாதி, என்றும் அன்புடன், தசரதன், திருடா திருடா, சதிலீலாவதி, காதல் கோட்டை போன்ற படங்களை நடித்து மிகப் பிரபலமான நடிகையாக மாறினார். இவர் அஜித்துடன் காதல் கோட்டை என்ற படத்தில் அஜித்தை ஒருதலையாக காதலித்திருப்பார். அப்பொழுது இவருடைய நடிப்பை பார்த்து அஜித் மிகவும் வியந்து போயிருக்கிறார். அத்துடன் அஜித் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டார்.

Also read: காதல் மன்னனாக வலம் வந்த ஏகே.. சைட் அடித்து மாட்டி கொண்ட பிரபல நடிகை

ஷாலினி: இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். பேபி ஷாலினி என்ற பெயருடன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமானார். இவர் ஹீரோயினாக நடித்ததை விட குழந்தை நட்சத்திரத்தில் அதிகமான படங்களில் நடித்து மிகவும் பரிச்சயமானவர். இவர் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதில் அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜித்துக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இவர்கள் இணைந்து நடித்த ஒரு படத்தின் மூலமே அஜித் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். அதன்பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

தபு: இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் காதல் தேசம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் இவர் அஜித்துக்கு ஜோடியாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலிப்பதாக நிறைய கிசுகிசுக்கள் வெளியானது. அதிலும் இந்த படத்தில் வரும் சந்தன தென்றல் பாடல் சூப்பர் ஹிட் ஆகி அஜித் சந்தன நடிகையை காதலிக்கிறார் என்ற கிசுகிசுக்கள் எல்லாம் வந்தது.

Also read: வித்தியாசமாக ஷாலினியிடம் காதலை வெளிப்படுத்திய அஜித்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரொமான்ஸ்

லைலா: இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் கள்ளழகர் என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரோஜாவனம், முதல்வன், பார்த்தேன் ரசித்தேன், தீனா, நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, பிதாமகன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். இவர் அஜித் உடன் தீனா என்ற படத்தில் நடித்த போது அஜித் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட ஒரு நடிகை. ஏனென்றால் இவருடைய வெகுளித்தனமான பேச்சும் குழந்தைத்தனமான சிரிப்பும் அஜித்திற்கு மிகவும் பிடித்திருந்தது. அஜித் மனதில் ஒரு ஆழமான இடத்தில் பதிந்து விட்டார்.

மகேஸ்வரி: இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கருத்தம்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் பாஞ்சாலங்குறிச்சி, நேசம், உல்லாசம், என் உயிர் நீதானே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுக்குள் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. அந்த அளவுக்கு இவர்கள் இருவரும் எதார்த்தமாக நடித்திருப்பார்கள்.

Also read: ஷாலினிக்காக அஜித் மாற்றிய 5 குணங்கள்.. சால்ட் & பெப்பர் ஸ்டைலுக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்

Trending News