திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயிலர் வசூலை சரிக்க திட்டம்.. செப்டம்பர் ஒன்றை குறிவைத்து வெளிவரும் 6 படங்கள்

Jailer Movie: ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது வரை திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு சில படங்கள் வெளியானாலும் ஜெயிலர் படம் தான் ஹவுஸ்புல் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது இப்படத்தின் வசூலை முறியடிக்க ஆறு படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.

அதாவது வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி கிட்டத்தட்ட ஆறு படங்கள் வெளியாவதால் என்னென்ன படங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில் அவருடைய நடிப்பில் அடுத்ததாக கிக் என்ற படம் வெளியாகிறது.

Also Read : ஓடிடி-யில் கூட விலை போகாத ஆர்யாவின் 5 படங்கள்.. சந்தானத்தை மலை போல் நம்பி இறங்க காரணம்

கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் காதல் படமாக கிக் படம் உருவாகி இருக்கிறது. இதற்கு அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள படம் குஷி. விஜய் தேவரகொண்டா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி படமும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகிறது. தற்போது பிரம்மாண்டமாக பிரமோஷன் நடந்து வருகிறது.

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுக நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் ரங்கோலி. பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படமும் வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. செகண்ட் இன்னிங்ஸ் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார் சரத்குமார்.

Also Read : ஜெயிலர் பட நடிகரை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய தனுஷ்.. மாமனாரை பழிவாங்க இப்படியும் செய்யலாம்.!

போர் தொழில் படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த நிலையில் இப்போது பரம்பொருள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்ற நிலையில் இப்படம் செப்டம்பர் 1 வெளியாகிறது.

மேலும் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள லக்கி மேன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் கார்மேகங்கள் கலைகின்றன படங்களும் அன்று வெளியாக இருக்கிறது. ஒரே நாளில் ஆறு படங்கள் வெளியாவதால் எந்த படம் ரசிகர்களை கவர்ந்து வசூல் குவிக்கும் என்பது படம் வெளியானால் தெரிந்து விடும்.

Also Read : வில்லனா இருந்த உன்ன ஹீரோவா ஆக்கினது தப்பா போச்சு.. இமேஜ் பார்க்கும் சரத்குமார், புலம்பி தவிக்கும் தயாரிப்பாளர்

Trending News