வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பேருக்கு தான் தமிழ்நாடு டைட்டில் ஃபுல்லா இங்கிலீஷ்ல, நல்ல பொழப்பு.! யாரு படு மொக்க என போட்டியில் நாளை வெளிவரும் 6 படங்கள்

English Title Tamil Movies: பொதுவாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களின் டைட்டில் தமிழில் இருக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்த சூழலில் பெரிய நடிகர்கள் முதல் எல்லோருமே ஆங்கில பெயரில் டைட்டில் வைப்பதை இப்போது பழக்கமாக வைத்து உள்ளார்கள். இது இப்போது ஒரு ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதாவது படத்தை பார்க்க மட்டும் தமிழ் ரசிகர்கள் வேண்டும் ஆனால் ஸ்டைல் என்ற பெயரில் ஆங்கில டைட்டில் வைத்து படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு லியோ என ஆங்கில பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ரஜினியின் டைட்டிலும் ஜெயிலர் என்று வைத்துள்ளனர்.

Also Read : பீஸ்ட் மாதிரி நேரத்தில் கோட்டை விட்ட நெல்சன்.. ஜெயிலர் சென்சருக்கு பின் பயத்தில் ரஜினி

இதைவிட கொடுமை என்னவென்றால் நாளை தமிழில் கிட்டத்தட்ட ஆறு படங்கள் வெளியாகிறது. இந்த ஆறு படங்களுமே ஆங்கில டைட்டிலை கொண்டிருக்கிறது. இவ்வாறு தமிழ் பெயரே இல்லாத தமிழ் படங்களுக்கு ரசிகர்கள் எவ்வளவு வரவேற்பு கொடுப்பார்கள் என்பது சந்தேகம்தான்.

அந்த படங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். சந்தானம், சுரபி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் டிடி ரிட்டன்ஸ் படம் நாளை வெளியாகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் ஹிட்டான பீட்சா படத்தின் மூன்றாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் காளி வெங்கட், பவித்ரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Also Read : லியோவுக்காக தீயாக வேலை செய்யும் விஜய்.. ஜவான் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்

இதைத்தொடர்ந்து எம் ஆர் மாதவன் இயக்கத்தில் ரிஷி ரித்விக் நடிப்பில் டைனோசர் என்ற படம் வெளியாக இருக்கிறது. முழுக்க முழுக்க காதல் படமாக பரத், வாணி போஜன் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிப்பில் லவ் என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கும் ஆங்கிலத்தில் டைட்டில் வைத்திருக்கின்றனர்.

இது தவிர நாளை எல்ஜிஎம் மற்றும் டெரர் என்ற படங்களும் வெளியாக இருக்கிறது. ஒரே நாளில் இந்த ஆறு படங்களும் வெளியானாலும் இதில் ஒரு தமிழ் படத்தின் டைட்டில் கூட இடம்பெறாதது வெட்கக்கேடான விஷயமாக இருக்கிறது. மேலும் இதை நினைத்து பெரிய நடிகர்கள் இனி தங்களது படங்களின் பெயர்களை தமிழில் தான் இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக கூறினால் இந்த சூழல் மாற வாய்ப்பு இருக்கிறது.

Also Read : முட்டி மோதியும் பிரயோஜனம் இல்ல.. பழைய ரூட்டுக்கு திரும்ப கதையை உருட்டும் சந்தானம்

Trending News