ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.ஜே.சூர்யா.. வரிசை கட்டி நிற்கும் படங்கள்

sj-suyah-photos

எஸ்.ஜே.சூர்யா தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி மலையாளத்திலும் வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனராக இருந்து நடிகர் அவதாரம்

வாலி, குஷி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கள்வனின் காதலி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து ஹூரோவாக நடித்து வந்தார். அதன்பின்னர், விஜய்யின் மெர்சல் படத்தில் கம்பேக் கொடுத்து சிம்புவின் மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டினார்.

தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், படம் இயக்குவதில்லை. அதன்படி, ஷங்கரின் இந்தியன் -2 படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அக்கட்சியில் நடிப்பில் ஸ்கோர் செய்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். எனவே இந்தியன் – 3 படத்திலும் முக்கிய வில்லனான மிரட்டுவார் என்று தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான சரிப்போதா சனிவாரம் என்ற படத்தில் நானிக்கு வில்லனாக நடித்து பாராட்டு பெற்ற எஸ்.ஜே.சூர்யா, ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் எஸ்.ஜே.வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் எல்.ஐ.கே படத்தில் முக்கிய கேரக்டரிலும், விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கி வரும் வீர தீர சூரன் படத்திலும் முக்கிய ரோலில் எஸ்.ஜே. சூர்யா நடித்து வருகிறார்.

அதேபோல், கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சார்தார் படத்தின் 2 ஆம் பாகம் தயாராகவுள்ளது. இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே,.சூர்யா நடிக்கவுள்ளார். அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் ஹீரோவாக நடித்து வரும் குட் பேட் அக்லி என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய ரோலில் நடித்து வருகிறார். எஸ்.ஜே,சூர்யாவின் முதல் ஹீரோ அஜித் என்பதால் இப்படத்திற்கு அவர் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நடிப்பார் என தெரிகிறது.

மலையாள சினிமாவில் எஸ்.ஜே. சூர்யா

ஒரு திறமையான கலைஞனுக்கு மொழி தடையில்லை என்பது போல், தமிழ், தெலுங்கு சினிமாவைத் தாண்டி மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. அதன்படி, அடுத்த வருடம், மலையாளத்தில் விபின் தாஸ் இயக்கவுள்ள புதிய படத்தில் பகத் பாசில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதில், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடிக்கவுள்ளார். இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானதாக தகவல் வெளியானது.

மேலும், பிரபல நடிகர் துல்கர் சல்மான் இயக்கத்தில், நகாஸ் ஹிதயத் இயக்கும் புதிய படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளார். இந்த நிலையில், இயக்குனராக வெற்றி பெற்றதுடன், ஒரு நடிகராகவும், வில்லனாகவும் இன்று தென்னிந்திய சினிமாவில் கோலோட்சி வரும் எஸ்.ஜே.சூர்யாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவர், நடிக்கும் படங்களில் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்துவதுடன் அக்கதாப்பாத்திரத்திற்கு அவர் முக்கியத்துவம் தருவது படத்திற்கு கூடுதல் பலம் தருவதாகவும், விரைவில் அவர் ஹீரோவாகவும் நடிப்பார் என சினிமா விமர்சகர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement Amazon Prime Banner