ஜகமே தந்திரம் படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை வைத்தது ஏன்? என்ற காரணத்தை சமீபத்திய பேட்டியில் கார்த்திக் சுப்புராஜ் கூறியதிலிருந்து அந்த கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கலாம் எனக் கூறி வருகின்றனர்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக வெளியாக உள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். தியேட்டர் ரிலீஸ் ஆக வரவேண்டிய திரைப்படம் பைனான்ஸ் பிரச்சனையால் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
இது குறித்து படக்குழுவினர் படத்தின் பிரமோஷன் வேலைகளை தொடங்கி விட்டனர். மேலும் முக்கியமான மீடியா நிறுவனங்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகின்றனர். அப்படி கொடுக்கையில் படத்தைப் பற்றிய பல விஷயங்களை தெரிவித்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
அதில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருந்தார் என்பதையும் கூறியிருந்தார். மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாதான் முதலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அப்போது எஸ் ஜே சூர்யா பல படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் இந்த படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்க முடியவில்லை எனக் கூறிய அந்த படத்தை மிஸ் செய்து விட்டதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார்.
ஒருவேளை எஸ் ஜே சூர்யா இந்தப் படத்தில் நடித்திருந்தால் இப்போது இருக்கும் எதிர்பார்ப்பை விட இன்னும் இரண்டு மடங்கு எதிர்பார்ப்பு இருக்கும் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படம்தான் எஸ் ஜே சூர்யா தமிழ் சினிமாவில் செகண்ட் இன்னிங்சை பிரமாதமாக தொடங்க காரணமாக அமைந்தது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
