புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எஸ் ஜே சூர்யா எடுத்த அவசர முடிவு.. சம்பளத்தில் கைவைத்த தயாரிப்பாளர்

விஜய் சேதுபதி போல் வில்லன், ஹீரோ என மாறி மாறி ரசிகர்களை திக்கு முக்காடச் செய்து வருகிறார் எஸ் ஜே சூர்யா. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடமையை செய் படம் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முத்தின கத்திரிக்காய் படத்தை இயக்கிய வெங்கட்ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் கடமையை செய் பிரஸ் நிகழ்ச்சிக்கு எஸ் ஜே சூர்யா வரவில்லையாம். படத்தின் கதாநாயகனை இந்நிகழ்ச்சிக்கு வராததால் படக்குழு அதிருப்தியில் இருந்துள்ளது. அதாவது கடமையை செய் படத்தில் நடித்ததற்கு சூர்யாவுக்கு 70 லட்சம் சம்பளத்தை படக்குழு நிலுவையில் வைத்துள்ளனர்.

இதனால் எஸ் ஜே சூர்யா அந்த நிகழ்ச்சியை தவிர்த்துள்ளார். அதன் பின்னர் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வற்புறுத்தியதால் எஸ் ஜே சூர்யா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு டுவிட்டரில் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி படம் வெளியாகி உள்ளது.

ஆனால் தற்போது வரை எஸ் ஜே சூர்யாவுக்கு சம்பள பாக்கியை கொடுக்காமல் தயாரிப்பாளர் இழுத்தடித்து வருகிறார். இதற்கு காரணம் அந்நிகழ்ச்சிக்கு எஸ் ஜே சூர்யா வராதது தான் காரணம் என கூறப்படுகிறது.

எஸ் ஜே சூர்யா இவ்வாறு அவசரப்பட்டு எடுத்த முடிவால் தற்போது சம்பளத்தை வாங்க முடியாமல் தவித்து வருகிறார். மாநாடு படத்திற்குப் பிறகு இவரது மார்க்கெட் தமிழ்சினிமாவில் உயர்ந்தாலும் இதுபோன்று சில காரியங்களை அவசரப்பட்டு செய்வதால் அவரது பெயருக்கு கலங்கம் விளைவிக்கிறது.

Trending News