திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

லப்பர் பந்து டீமை அலறவிட்ட எஸ் ஜே சூர்யா.. மனக்கசப்பில் இருந்து மீளாத அட்டகத்தி தினேஷ்

2024 அரண்மனை 4, ராயன், மகாராஜா போன்ற படங்களின் வரிசையில் இப்பொழுது லப்பர் பந்து படமும் சேர்ந்துள்ளது. படம் ரிலீஸ் ஆகி பத்து நாட்கள் ஆகியும் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளை ஓடி வருகிறது. பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இந்த படத்திற்கு நிறைய காட்சிகள் ஒதுக்கி வருகின்றனர்.

5.50 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரை 15 கோடிகள் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரீஷ் கல்யாண் இருவருக்கும் இந்த படம் கேரியர் பெஸ்டாக அமைந்துள்ளது. தினேஷின் முதல் படம் அட்டகத்தி. அதிலிருந்து தான் அவருக்கு அட்டகத்தி தினேஷ் என்ற பெயர் வந்தது.

லப்பர் பந்து படத்தில் தினேஷ் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் கெத்து. இப்பொழுது அவரை கெத்து தினேஷ் என்று கூறி வருகிறார்கள். முதலில் தினேஷ் கேரக்டருக்காக இந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பிச்சைமுத்து, எஸ் ஜே சூர்யாவை தான் அணுகி இருக்கிறார். ஆனால் அவர் இந்த படத்திற்காக 7 கோடிகள் சம்பளம் கேட்டுள்ளார்.

மனக்கசப்பில் இருந்து மீளாத அட்டகத்தி தினேஷ்

படத்தின் பட்ஜெட்டே 5.50 கோடிகள்தான் எஸ் ஜே சூர்யாவிற்கு எப்படி 7 கோடிகள் கொடுக்க முடியும் என இந்த படத்திற்காக அட்டகத்தி தினேஷை நடிக்க வைத்துள்ளனர். இப்பொழுது படமும் ஹிட் அடித்து வெற்றி நடை போட்டு வருகிறது.

தற்சமயம் அட்டகத்தி தினேஷ் பெரிய மன வருத்தத்தில் இருந்துவருகிறாராம். அவர் முதலில் நடித்த படம் அட்டகத்தி அதன் பிறகு அவர் குக்கூ, விசாரணை என பல நல்ல நல்ல படங்களை கொடுத்தபோதிலும் அவருக்கு அட்டகத்தி என்ற பெயர் மாறவில்லை. இது அவருக்கு இன்று வரை மனச்சங்கடத்தை கொடுத்து வருகிறதாம்

Trending News