எஸ் ஜே சூர்யா இயக்குனர் மற்றும் நடிகராக பெருந்திரளான மக்கள் கூட்டத்தை கொண்ட கொண்டுள்ளார். இவருடைய பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.
வாலி: தல அஜித் இருவேடங்களில் நடித்து வெளியான வாலி திரைப்படம் 1991இல் வெளியானது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். தான் காதலித்த பெண் தம்பியை மணந்து கொண்ட பிறகும் அவளை அடையத் துடிக்கும் அண்ணனின் கதை. இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

குஷி: 2000வது ஆண்டு தளபதி விஜய் ஜோதிகா நடிப்பில் உருவான குஷி படத்தை இயக்கியிருந்தார். திரைப்படம் 175 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார் எஸ் ஜே சூர்யா.

நியூ: 2004 ஆம் ஆண்டு வெளியான நியூ திரைப்படத்தை இயக்கி அவரே நடித்திருந்தார் .இதில் சிம்ரன்,தேவயானி நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.
அன்பே ஆருயிரே: 2005 ஆம் ஆண்டு வெளியான அன்பே ஆருயிரே திரைப்படத்தை தயாரித்து இயக்கி, நடித்திருந்தார் எஸ் ஜே சூர்யா.இதில் கதாநாயகியாக நிலா, நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்திருந்தார்கள்.

இசை: 2015ஆம் ஆண்டு இசை திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். சாவித்திரி என்ற புதுமுக நடிகை இப்படத்தில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்திருந்தார்.
