புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வடிவேலு போல இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டே எஸ்ஜே சூர்யா.. செக் வைத்த தயாரிப்பாளர்

எஸ்ஜே சூர்யா தற்பொழுது பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் மாநாடு படத்திற்குப் பிறகு இவருடைய ரேஞ்ச் வேற லெவல்ல மாறிவிட்டது என்றே சொல்லலாம். இப்பொழுது நான்கு படத்திற்கு மேல் கமிட் ஆகியுள்ளார்.

ஆனால் இவருக்கு வடிவேலு போல ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது வடிவேலுக்கும், இயக்குனர் சங்கருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் வடிவேலு தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாத படி இயக்குனர் ரெட் அலர்ட் கொடுத்திருந்தார். அதன்படி வடிவேலு 10 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார்.  பின்னர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் திரும்ப வந்திருக்கிறார்.

Also read : 54 வயது வர முரட்டு சிங்கிளாக இருப்பதற்கு இதான் காரணம்.. வியக்க வைத்த SJ சூர்யாவின் பதில்

இப்பொழுது இதே மாதிரி எஸ்ஜே சூர்யா விற்கும் ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு எஸ்ஜே சூர்யாவிடம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையை கொடுத்திருக்கிறார். ஆனால் சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு அடுத்து எஸ்ஜே சூர்யா அட்வான்ஸை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் ஞானவேல் ராஜா பரவாயில்லை வைத்துக் கொள்ளுங்கள் பிறகு பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டார். இதற்கு அடுத்து இப்பொழுது எஸ்ஜே சூர்யா பெரிய அளவில் வளர்ந்து விட்டார். அதனால் ஞானவேல் ராஜா எனக்கு பணம் பண்ணிக் கொடுங்கள் இல்லை என்றால் அட்வான்ஸ் திருப்பி கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு எஸ்ஜே சூர்யா படம் பண்ணித் தருகிறேன் ஆனால் தற்போது நான் என்ன சம்பளம் வாங்குகிறனோ அதே சம்பளம் எனக்கு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

Also read : வெற்றி படத்தினால் ஒரேடியாக சம்பளத்தை ஏற்றிய 5 நடிகர்கள்.. உச்சாணி கொம்புக்கு போன SJ சூர்யா

ஆனால் தயாரிப்பாளர் அப்படி தர முடியாது அப்போது என்ன சம்பளம் வாங்கினீர்களோ அதைத்தான் கொடுப்பேன் என்று கூறிவிட்டார். அதற்கு அவர் என்னால் அப்படி நடிக்க முடியாது நீங்கள் கொடுத்த அட்வான்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கொடுத்திருக்கிறார். அதற்கு அந்த தயாரிப்பாளர் ஒன்று பழைய சம்பளத்தில் நடித்துக் கொடுங்கள் இல்லை என்றால் அட்வான்ஸுக்கு வட்டி போட்டு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

இந்த மாதிரி சொல்லி நடிப்பதற்கு செக் வைத்து விட்டார். இதை இவர் வடிவேலு போல ஏற்றுக்கொள்ளாமல் கூடிய சீக்கிரமே இதனை சரி செய்தால் தொடர்ந்து இவரால் சினிமாவில் நிற்க முடியும். இல்லையென்றால் இவருடைய கெதி அதோ கெதி தான். இதற்கு இடையில் இவர் நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆனாலும் அந்தப் படங்களில் நடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

Also read : வடிவேலு எண்ட்ரியால் காண்டான கவுண்டமணி.. நெஞ்சிலேயே மிதித்து விரட்டிய சம்பவம்

Trending News