ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

எஸ்ஜே சூரியாவின் ட்ராக்கை மாற்றிய இயக்குனர்.. பிரஸ் மீட்டில் ஓப்பனாக பேசிய நடிப்பு அரக்கன்

SJ Surya: சினிமாவிற்குள் நுழைந்து பல போராட்டங்களைக் கடந்து இயக்குனராக வெற்றி படங்களை எஸ்ஜே சூர்யா கொடுத்து வந்தார். அப்படி வந்த இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் அது எதுவும் இவருக்கு கிளிக் ஆகாமல் சரியான வரவேற்பு கிடைக்காமல் போய்விட்டது. என்னதான் விடாமுயற்சியுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு கை கொடுத்து தூக்கி விட்ட முதல் படம் இறைவி.

இந்தப் படத்தின் மூலம் தான் நடிப்பு அரக்கன் என்று சொல்லும் அளவிற்கு இவருடைய நடிப்புத் திறமை அனைவருக்கும் தெரியவந்தது. இந்தப் படம் ஒரு தோல்வி படமாக இருந்தாலும் எஸ் ஜே சூரியாவிற்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்று முக்கிய கதாபாத்திரத்தின் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட இவருக்கு மனதில் எங்கேயோ ஒரு ஓரத்தில் இவருடைய பாதை மாறிவிட்டது என்ற ஏக்கமும் இருக்கிறது. அதாவது பிடித்த தொழிலில் ஒருவருக்கு வெற்றி கிடைத்தால் தான் அது ஒரு முழுமையான சந்தோஷத்தை கொடுக்கும். அந்த வகையில் எஸ்ஜே சூர்யாவுக்கு இயக்குனர் என்ற தடத்தை மாற்றி ஹீரோ, வில்லன் என்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

Also read: கைராசியான எஸ்.ஜே சூர்யா நடித்து வெற்றி கண்ட 5 ஹீரோக்கள்.. விஷாலை தூக்கி விட்ட நடிப்பு அரக்கன்

இதை இவரே சமீபத்தில் மதுரையில் நடந்த ஒரு பிரஸ் மீட்டில் ஓபன் ஆக பேசி இருக்கிறார். அதாவது என்னுடைய கேரியர் மாறியதற்கு முக்கிய காரணமான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான். நான் ஏதோ சில படங்களை இயக்கி அதில் நடித்துக் கொண்டு வந்தேன். அந்த சமயத்தில் கார்த்திக் சுப்புராஜ் இறைவி படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்து என்னுடைய ட்ராக்கை மாற்றி விட்டார்.

அதிலிருந்து டைரக்ட் பண்ணுவதையே நான் விட்டுவிட்டு முழு நேரமும் நடிப்பில் கவனத்தை செலுத்தி விட்டேன். அதன் மூலம் எனக்கு பேர், புகழ், பணம் எல்லாமே கிடைத்தது. அதனாலயே எனக்கு டைரக்ட் பண்ணுவதற்கு தோண மாட்டேங்குது என்று பிரஸ் மீட்டில் ஓப்பனாக சொல்லி இருக்கிறார்.

அந்த வகையில் ஏதோ ஒரு ஓரத்தில் எஸ் ஜே சூர்யா இயக்குனராக வெற்றி பெற முடியவில்லை என்ற ஏக்கம் அவரிடம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பு இல்லாமல் எந்த படமும் வெற்றி பெறுவதில்லை என்ற நிலைமைக்கு நடிப்பு அரக்கனாக மாறிவிட்டார். அதிலும் எதார்த்தமான நடிப்பும், நக்கல் நையாண்டியான பேச்சும் இவரிடம் மிகப்பெரிய ஹைலைட்டாக இருப்பதுதான் மக்கள் மிகவும் பாராட்டி வருகிறார்கள்.

Also read: சிம்புவுடன் கைகோர்க்கும் எஸ்.ஜே சூர்யா.. பல வருஷத்துக்கு முன்னாடி பண்ண வேண்டிய படம் இப்ப பண்ண போறாங்க.!

Trending News