கோலிவுட்டில் நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய பிறகு இயக்குனராக உருவெடுத்தவர் தான் எஸ் ஜே சூர்யா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றிவருகிறார்.
மேலும் எஸ் ஜே சூர்யா இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும், மியூசிக் கம்போசர் ஆகவும், ப்ரொடியூசர் ஆகவும் திகழ்கிறார். அதேபோல் சூர்யாவின் இயக்கத்தில் முதன் முதலில் தயாரான படம் ‘வாலி’ என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து குஷி, அன்பே ஆருயிரே, நியூ, இசை, கள்வனின் காதலி, வியாபாரி, ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர் போன்ற பல படங்களில் பணியாற்றி திரைத்துறையில் நீங்காத இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நெஞ்சம்மறப்பதில்லை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சூர்யாவின் நடிப்பு தாறுமாறாக உள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்ஜே சூர்யா அடுத்ததாக பாலிவுட் பாஷாவான அமிதாப் பச்சனை வைத்து படமொன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது தற்போதெல்லாம் எஸ் ஜே சூர்யா நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருவதால், இயக்குனர் எஸ் ஜே சூர்யா மிஸ் ஆவதாக அவருடைய ரசிகர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது SJ சூர்யாவின் ரசிகர்கள் எல்லாம் சந்தோஷப்படும் வகையில் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால், எஸ் ஜே சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை முடித்த பிறகு அமிதாப் பச்சனை வைத்து ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறாராம். அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் எஸ் ஜே சூர்யா தான் எழுதி இயக்க போகிறாராம்.
மேலும் எஸ் ஜே சூர்யா ஏற்கனவே அமிதாப்பச்சனை வைத்து ‘உயர்ந்த மனிதன்’ என்னும் படத்தை இயக்கினார் என்பதும், ஆனால் அமிதாப்பச்சன் பல படங்களில் கமிட்டாகி இருந்ததால் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டு அந்தப் படப்பிடிப்பு முழுவதுமாக முடியவில்லை என்பதும் கூடுதல் தகவல்.
எனவே, இந்த செய்தியை அறிந்த எஸ் ஜே சூர்யாவின் ரசிகர்கள் பலர் அவரை மீண்டும் இயக்குனராக காண காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.