திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மீண்டும் சம்பவம் செய்ய காத்திருக்கும் SJ சூர்யா.. வேற லெவல் அப்டேட்

தல அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. இதனைத்தொடர்ந்து குஷி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். சமீபகாலமாக இவர் படங்களை இயக்குவதை விட நடிப்பில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் விஜய் நடித்த மெர்சல் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் என்றும் கூறலாம்.

இந்த நிலையில், மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால், இது ஒரு வெப்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. கொலைகாரன் என்ற திரைப்படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் என்பவர் இந்த வெப்தொடரை இயக்க உள்ளார் எனவும், படப்பிடிப்பு இம்மாதம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

sj-surya
sj-surya

இந்த தொடரில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் எஸ்.ஜே சூர்யா கைதேர்ந்தவர். ஸ்பைடர், மெர்சல் போன்ற படங்களில் இவரது வில்லத்தனம் வெகுவாக பாராட்டப்பட்டது. சமீபத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்திலும் இவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. எனவே இந்த வெப் தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Trending News