வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெப் சீரிஸில் நடிக்கும் SJ சூர்யா.. தலைசுற்ற வைக்கும் பட்ஜெட்!

எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து எஸ் ஜே சூர்யா ஹீரோ, வில்லன் என பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். எஸ் ஜே சூர்யா வைத்து படங்களை இயக்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு ரசிகர்களிடம் பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு எஸ் ஜே சூர்யாவிற்கு தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. தற்போது மாநாடு மற்றும் டான் 2 படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். மேலும் கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இவ் வெப்சீரிஸ் இயக்க உள்ளார். இதனை புஷ்பகாயத்ரி தயாரிக்க உள்ளார். இதுவரைக்கும் எந்த வெப்சீரிஸ் எடுக்காத அளவிற்கு மிகப் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதற்காக சுமார் 40 கோடி அளவில் பட்ஜெட்டில் வெப் சீரிஸ் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் தற்போது படப்பிடிப்பிற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெப்சீரிஸ் பெரிய அளவில் பேசப்படும் எனவும் படக்குழு கூறிவருகின்றனர்.

sj-suriya-cinemapettai
sj-suriya-cinemapettai

மேலும் எஸ் ஜே சூர்யாவின் கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் முதல் வெப்சீரிஸ் என்பதால் இதற்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பலரும் கூறி வருகின்றனர். கூடிய விரைவில் படப்பிடிப்பை நடத்தி இன்னும் 6 மாத காலங்களில் வெப் சீரிஸ்சை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News