திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தலைவரே உங்கள ஹாக் பண்ணிட்டாங்களா.? 31 வயது நடிகையிடம் ஜொள்ளு விடும் SJ சூர்யா

Actor SJ Suryah: தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகராக இருப்பவர் எஸ் ஜே சூர்யா. கதாநாயகனாக, வில்லனாக ஒரே நேரத்தில் நடித்து வரும் இவர் இரண்டிலும் வெற்றி கொடி நாட்டியிருக்கிறார். முதன் முதலில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையை சினிமாவிற்குள் வந்த இவர் வாலி மற்றும் குஷி படங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

பல வருடங்கள் கழித்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோவாக களம் இறங்கினார் இவர். தான் இயக்கி நடிக்கும் படங்களை விட மற்றவர்களின் இயக்கத்தில் இவர் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. தற்போது படம் இயக்குவதை ஓரங்கட்டி விட்டு முழு நேர நடிகராக மாறி இருக்கும் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு.

Also Read:பிரபுதேவாவுடன் ஜோடி போட மறுத்த ஐஸ்வர்யா ராய்.. லிவிங்ஸ்டன் ஸ்கோர் செய்த படம்

அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலம் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான விஷயங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவது இவருடைய வழக்கம். ஆனால் சில தினங்களுக்கு முன் இவர் தன்னுடைய டிவிட்டரில் போட்ட பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு நெட்டிசன்கள் எஸ் ஜே சூர்யாவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு பிறந்தநாள் வந்தது. எஸ் ஜே சூர்யா இவரின் பிறந்தநாளுக்கு போட்ட ட்வீட் தான் தற்போது நெட்டிசன்களுக்கு மிகப்பெரிய கண்டன்ட்டாக மாறி இருக்கிறது. எஸ் ஜே சூர்யா கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த பதிவை போட்டு இருக்கிறார் என்பது மற்றும் நன்றாக தெரிகிறது.

Also Read:16 வயதில் தேசிய விருது 22 வயதில் எதிர்பாராத மரணம்.. புகழின் உச்சத்தை தொட்ட கார்த்திக் நடிகை

கியாரா அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன எஸ் ஜே சூர்யா அடுத்த வருடமும் உங்களுக்கு வெற்றியானதாக அமைய வேண்டும் என்றெல்லாம் பதிவிட்டுவிட்டு, அது போதாது என்று இந்திய சினிமாவின் அடுத்த ஸ்ரீதேவி நீங்கள் தான் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு தான் இவரை ட்ரோல் செய்து வருகின்றனர். உங்களுடைய ட்விட்டரை வேறு யாராவது ஹேக் செய்து விட்டார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இது போன்ற விஷயங்களை சிம்பு பண்ணலாம், உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை தலைவரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமா உலகில் இருந்த அழகு தேவதை என்று சொல்லலாம். அவருடைய மறைவிற்குப் பிறகு இந்த அடுத்த ஸ்ரீதேவி என்ற பேச்சு தமிழ் சினிமா ரசிகர்களால் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப்படாத விஷயமாக இருக்கிறது.

Also Read:மணிரத்னத்தை விட அதிகம் சம்பாதிக்கும் சுஹாசினி.. இந்த மொக்க பேட்டிக்கு இத்தனை லட்சமா.?

Trending News