வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பிரியங்கா மோகனுக்கு டாட்டா போட்டு புது நடிகைக்கு ரூட் போடும் டாக்டர்..  இனி அக்கட தேசத்தில் SK படம் ஓடுவது கஷ்டம் தான்!

SK leaves Priyanka Mohan and hangs out with Sreeleela: தமிழ் சினிமாவில் விஜய்க்கு அடுத்தபடியாக நடிப்பு, நடனம் அனைத்திலும் பட்டையை கிளப்பி, குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக வளர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையான சிவகார்த்திகேயனுக்கு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

இவை தவிர ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் பிஸியாக உள்ளார் சிவகார்த்திகேயன். சிவாவின் டான் மற்றும் டாக்டர் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

நெல்சனின் டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனுக்கு கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆகுது என்று கிசுகிசுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஜோடி டானிலும் ஒன்றிணைந்தனர்.

பிரியங்கா மோகனுக்கு ஆல் இன் ஆளாக திரை துறையின் அனைத்து வேலைகளிலும் உதவியாக இருந்துள்ளார் சிவா. பிரியங்காவின் கால்ஷீட் முதற்கொண்டு இவர் பெர்மிஷன் தானாம்.

குண்டூர் காரம் படத்தில் மகேஷ்பாபு உடன்  நடித்த நடனபுயல் ஸ்ரீ லீலா

ஆனால் இப்போது குண்டூர் காரம் படத்தில் நடித்த  நடன புயல் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலாவுக்கு ரூட் போட்டு வருகிறார் நம்ம டாக்டர்.

ஸ்ரீ லீலாவிடம் நீங்க கமிட்டடா? எந்த மாதிரியான பாய்ஸ் பிடிக்கும்? என்பது போல் ஓவர் ஜொள்ளு விட்டு வருகிறார்

சமீபத்தில் திருச்சியில் கல்லூரி ஒன்றில் விழா ஒன்றிற்கு சென்றிருந்த இந்த ஜோடி, மாணவர்கள் முன்பு  அலப்பறையை கிளப்பிவிட்டதாம்.

சிவகார்த்திகேயனுக்கு பிரபலமான “குர்ச்சி மடத்த பெட்டி”  தெலுங்கு பாடலை ஒன்றாக சேர்ந்து ஆட, கலாய்க்க, செல்பி எடுக்க என ஓவர் ஜாலி தானாம்.

குண்டூர் காரம் படத்தில் நடித்ததன் மூலம் மகேஷ்பாபு மற்றும் ஸ்ரீ லீலா உடனான கெமிஸ்ட்ரி பத்திகிட்டு போக சிவகார்த்திகேயனின் செயலால் கோபத்தில் கொந்தளித்து வருகிறார் மகேஷ் பாபு.

தெலுங்கில் மாவீரன் மற்றும் அயலான் படங்களின் மூலம் சிறப்பான வரவேற்பை பெற்று வரும் சிவகார்த்திகேயனால் ஏற்கனவே அங்குள்ள நடிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.

Trending News