வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

எஸ் கே ஆரின் தம்பி மூலம் காய் நகர்த்தும் அப்பத்தா.. குணசேகரனை பழிவாங்க நினைக்கும் அரசு

ரொம்பவும் அழகாக கதையை நகர்த்தி கொண்டுவரும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். அந்த வகையில் ஆதிரை திருமணம் பெரிய போராட்டங்களுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் அதிக லாபத்தை பார்க்க வேண்டும் என்று குணசேகரன் நாலா பக்கமும் பெரிய திட்டத்தை போட்டு வருகிறார். அதாவது அப்பத்தா, எஸ் கே ஆர் மற்றும் கரிகாலன் அடுத்ததாக தம்பிகளின் சொத்து இதையெல்லாம் அடைவதற்கு மாஸ்டர் பிளான் வைத்திருக்கிறார்.

ஆனால் இவரைப் பற்றி தெரிந்து கொண்ட அப்பத்தா, ஆதிரை நினைத்தபடி திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காக குணசேகரன் கேட்டபடி சொத்தை தருவதாக சம்மதித்திருக்கிறார். ஆனால் அவ்வளவு ஈஸியாக குணசேகரனுக்கு கொடுக்க மாட்டார். இந்த சொத்தை எல்லாம் அவர்களின் வீட்டில் இருக்கும் மருமகளின் பெயரில் ஏற்கனவே எழுதி வைத்திருப்பார். ஆனால் அது புரியாமல் குணசேகரன் ஓவர் மிதப்பில் இருந்து வருகிறார்.

Also read: சுந்தரி, கண்ணம்மா நடித்துள்ள N4 படம் எப்படி?. அனல் பறக்கும் விமர்சனம் இதோ!

இதற்கு இடையில் எஸ்கேஆர் உடன் அவரது தம்பிகள் பேசும் போது குணசேகரனிடம் அதிகமான அவமானத்தை சந்தித்ததால் இந்த திருமணத்தின் மூலம் அவருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் நோக்கத்துடன் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள் என்பது தெரிய வருகிறது. அப்படி இருந்தால் ஆதிரையை, அருண் உண்மையாகவே காதலிக்கவில்லையா என்ற கேள்வியை எழுப்பிகிறது.

அடுத்ததாக அப்பத்தா, குணசேகரனிடம் நிச்சயதார்த்த வேலைகள் எந்த மாதிரி செய்யலாம் என்று எஸ்கேஆர் குடும்பத்துடனும் கலந்து அதன் பின் தான் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்காக எஸ் கே ஆர் வீட்டில் இருந்து அரசு மற்றும் அருண் வந்திருக்கிறார்கள். இவர்களிடம் நிச்சயதார்த்தத்தை பற்றி பேசும்போது உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் அப்படியே நிச்சயதார்த்தத்தை பெருசா செய்துவிடலாம் என்று குணசேகரின் அம்மா கேட்கிறார்.

Also read: குணசேகரனை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட நந்தினி.. பதிலடி கொடுத்த ஜனனி

அதற்கு அரசு நாங்கள் நிச்சயதார்த்த எல்லாம் பெருசா பண்ணுங்க என்றெல்லாம் கேட்க மாட்டோம் என்று சொல்கிறார். உடனே குணசேகரன் அப்போ உங்களுக்கு வேற என்ன வேணும் என்று கேட்கிறார். அதற்கு அரசு ஏதோ கேட்க வருகிறார். இவரைப் பார்த்தால் கண்டிப்பாக குணசேகரனுக்கு செக் வைப்பதற்காக அப்பத்தாவின் 40% ஷேர் கேட்கப் போகிறார் என்று தெரிகிறது.

ஆனால் இவர் இப்படி கேட்டால் கண்டிப்பாக இவருக்கு பின்னாடி அப்பத்தாவுடைய பிளான் தான் இருக்கும். இவர்களை வைத்துதான் அப்பத்தா, குணசேகரனுக்கு எதிராக காய் நகர்த்தப் போகிறார் என்று தெரிகிறது. ஏனென்றால் குணசேகரன் புலித்தோல் போர்த்திய பசு என்று அப்பத்தா நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்.

Also read: விட்டா ட்ரோனை வேட்டி குள்ள விற்றுவாங்க.. எதிர்நீச்சல் குணசேகரன் ஃபேமஸ் ஆன கெத்தான 5 டயலாக்

Trending News