புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

போக்கிரி சாமி, மன்மத சாமியாய் பீடி குடிக்கும் ரவீந்திர ஜடேஜா.. அவரையும் விடாத புஷ்பா ஃபீவர்

அறுவை சிகிச்சை காரணமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சிறிது காலம் ஓய்வில் இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. அவரை மைதானத்தில் காணமுடியாமல் ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர் .

தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு நீண்ட ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவரை வேறு மாதிரி சித்தரித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது புஷ்பா என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனா தாடி, மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார. அவரது இந்த கெட்டப், அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் பாடல்கள், மற்றும் டான்ஸும் ஹிட்டாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அல்லு அர்ஜுனாவிற்கு தமிழ்நாட்டிலும் நிறைய ரசிகர்கள் பெருகி வருகின்றனர்.

அல்லு அர்ஜுனாவை மையப்படுத்தி அவரது கெட்டப்பை, ரவீந்திர ஜடேஜாவிற்கு போட்டு, அதை வைரலாக்கி வருகின்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

Ravindra-jadeja
Ravindra-jadeja

Trending News