ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரெட்டை ஜடையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் தனுஷ் பட நடிகை..

நடிகை ஸ்மிருதி வெங்கட் இன்று நேற்று நாளை மற்றும் மௌன வலை உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி இருந்தாலும், தடம் படமே இவருக்கு அறிமுக படமாக அமைந்தது. அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்த தடம் படத்தில் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ஸ்மிருதி வெங்கட்.

இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படத்தில் பொறுப்பான தங்கையாக பொறுமையான குடும்ப பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் விருப்ப நடிகையாக மாறினார். மூக்குத்தி அம்மன் படத்திற்குப் பின்னர் ஏராளமான படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வகையில் கார்த்திக் நரேன், தனுஷ் முதல் முறையாக இணைந்து பணியாற்றி வரும் D43ல் முக்கிய வேடத்திலும், ஜெய்யின் புதிய படத்தில் கதாநாயகியாகவும் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பகையே காத்திரு என்ற மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.

இதுவரை கிளாமருக்கு நோ சொல்லி வரும் ஸ்மிருதி வெங்கட் படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

smurthi-venkat
smurthi-venkat

இதனாலேயே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் ரெட்டை ஜடையில் அழகு ததும்ப பல்வேறு க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

d43-heroin
d43-heroin

Trending News